மங்களவனம் பறவைகள் சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்களவனம் பறவைகள் சரணாலயம்(Mangalavanam Bird Sanctuary) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொச்சியில் உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும், இது சுமார் 2.74 ஹெக்டேர் பரப்பளவில் கொச்சி நகரின் நடுவில் அமைந்துள்ளது.[1] இங்குக் காணப்படும் ஆழம் குறைந்த ஏரியானது கால்வாய் ஒன்றின் மூலம் கொச்சியின் உப்பங்கடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மங்களவனம் கேரள உயர் நீதிமன்ற கட்டிடத்தின் பின் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பல வகையான புலம்பெயரும் பறவைகள் கூடு அமைக்கும் இடமாக உள்ளது. பலவிதமான தாவரங்கள் இங்குள்ள அலையாத்திக் காடுகளில் காணப்படுகிறது. மங்களவனம் "கொச்சி நகரின் பசுமை நுரையீரல்" என்று அழைக்கப்படுகிடுகிறது.[2] நகரத்தின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் இதன் பங்கினைக் கருத்தில் கொண்டே இவ்வாறு பொருள்கொள்ளப்படுகிறது. இப்பகுதி பல வகையான புலம் பெயரும் பறவைகளுக்குப் புகலிடமாக உள்ளது.[3]
இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான கட்டிடங்கள் இச்சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் நடமாட்டத்தினை வெகுவாக குறைத்து வருகின்றன. சரணாலயத்திற்கு மிக அருகிலுள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பறவைகளின் நோக்கு நிலை, புறப்பாடு, மற்றும் பறவைகளின் தரையிறக்கங்களுக்கு இடையூறாக உள்ளன. பறவைகள் கூடு கட்ட எடுத்து செல்லும் பொருட்களைத் தடுக்கின்றன. பறவைகளின் வழக்கமான அசைவுகளிலும் தடைகளை ஏற்படுத்துகின்றன. குஞ்சுகள் மற்றும் தாய்ப் பறவைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வரும்போது பறவைகளின் இயக்கத்திற்கும் இக்கட்டிடங்கள் தடையாக உள்ளன.[4] இந்த சரணாலயம் கல்லாடி, வனவிலங்கு பாதுகாவலர், மங்களவனம் பறவைகள் சரணாலயம் கட்டுப்பாட்டில் உள்ளது. கோடநாடு வனச்சரக கட்டுப்பாட்டிலும் இது வருகிறது.
Remove ads
தாவரங்களும் விலங்குகளும்
இந்த சரணாலயத்தில் காணப்படும் சதுப்புநிலம் மற்றும் அலையாத்திக்காடு சார்ந்த தாவர/மரங்களாக அவிசென்னியா அஃபிசினாலிஸ், ரைசோபோரா முக்ரோனாட்டா, அகாந்தஸ் இலிசிஃபோலியஸ் மற்றும் அக்ரோஸ்டிச்சம் ஆரியம் ஆகியவை உள்ளன. இத்தாவரங்கள் - ஐ.யூ.சி.என் செம்பட்டியல் அச்சுறுத்தப்பட்ட இனங்களாக இல்லாதிருப்பினும் கழிமுகப்பகுதியின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
மங்களவனம் பறவைகளின் புகலிடமாக உள்ளது. இங்கு 2006ஆம் ஆண்டு மே மாதம் பறவைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 32 பேரினங்களைச் சார்ந்த 194 பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இப்பகுதியிலிருந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த பறவை இனங்களின் எண்ணிக்கை 72 ஆகும். இங்குக் காணப்படும் சில பறவைகள் பவளக்காலி, பச்சைக்காலி, செம்பருந்து, கம்புள் கோழி, மற்றும் சின்ன பச்சைக்காலி.[5]
அண்மைய ஆய்வில், ஆறு வகையான பாலூட்டிகள், இந்திய பறக்கும்-நரி முக வௌவால், வண்ண வௌவால்,, இந்திய அணில் / மங்கலான பனை அணில், வீட்டு எலி / கருப்பு எலி, பெருச்சாளி மற்றும் நீர்நாய் காணப்படுகிறது. நீர்நில வாழ்வனவற்றில் இரு இனங்களும், மீன்களில் ஏழு இனங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றது.[6]
2006 ல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 17 வகையான பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் 40 பேரினத்தினைச் சார்ந்த 51 சிலந்தி இனங்கள் இங்கே காணப்படுகின்றன. இவை 16 குடும்பங்களைச் சார்ந்தவை. இது இந்தியாவில் பதிவான மொத்த சிலந்தி குடும்பங்களில் 27% ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
காட்சிக்கூடம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads