மச்சபூச்சர மலை

மலைத்தொடர் ,நேபாளம் From Wikipedia, the free encyclopedia

மச்சபூச்சர மலைmap
Remove ads

மச்சபூச்சரம் (Machapuchare), வடமத்திய நேபாளத்தில், இமயமலை மலத்தொடரில் அன்னபூர்னாவிற்கு தெற்கில் இரட்டை உச்சிககளுடன் கூடிய மலையாகும். நேபாள மக்கள், இம்மலையை சிவபெருமானின் உறைவிடம் எனக் கருதுவதால், இம்மலையில் மக்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் மச்சபூச்சர மலை, உயர்ந்த புள்ளி ...
Thumb
அதிகாலையில் மீன் வால் போன்று காணப்படும் மச்சபூச்சர மலை
Remove ads

அமைவிடம்

அன்னபூர்ணா மலையின் தெற்கே அமைந்த 22,793 அடி உயரத்தில் அமைந்த மச்சபூச்சரம் மலை, நேபாள மாநில எண் 5ல், காஸ்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பொக்காரா-லெக்நாத் நகரத்திற்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதன் இரட்டை கொடுமுடிகள் மீனின் வால் போன்று அமைந்துள்ளதால், நேபாள மொழியில் இம்மலைக்கு மச்சபூச்சரம் மலை என அழைக்கப்படுகிறது.

மச்சபூச்சரமலை, ஆல்ப்ஸ் மலைத்தொடரின், மட்டர்ஹார்ன் மலை வடிவத்தில் அமைந்துள்ளதால், இம்மலையை நேபாளத்தின் மட்டர்ஹார்ன் மலை என்று அழைப்பர்.[2]

Remove ads

இதனையும் காண்க

படக்காட்சியகம்

ஆதாரங்கள்

  • Andy Fanshawe and Stephen Venables, Himalaya Alpine Style. Hodder and Stoughton, 1995.
  • Wilfrid Noyce, Climbing the Fish's Tail, London, 1958
  • Koichiro Ohmori, Over The Himalaya, Cloudcap Press/The Mountaineers, 1994.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads