பொக்காரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொக்காரா (Pokhara) (நேபாள்|पोखरा), காத்மாண்டுவிற்கு அடுத்து, நேபாள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று.[1] பொக்காரா, காஸ்கி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. தலைநகர் காத்மாண்டிலிருந்து மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காரா மாநகரம் அமைந்துள்ளது. பெரும்பாலான கூர்க்கா படை வீரர்களின் தாயகமாக பொக்காரா உள்ளது.
இமயமலைத் தொடரில் 827 முதல் 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[2][3] பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.[4]
காத்மாண்டிலிருந்த்து முக்திநாத் யாத்திரை செல்பவர்கள் பொக்காரா வழியாகச் செல்ல வேண்டும்.
Remove ads
புவியியல்

பொகாரா பள்ளத்தாக்கில் வடமேற்கில் பொக்காரா நகரம் அமைந்துள்ளது.[5] பொக்காரா, இமயமலைத் தொடரில் 827 மீட்டர் முதல் 1,7400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 அங்குலம் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.[6] சேதி கண்டகி ஆறு பொக்காரா நகரத்தில் பாய்கிறது.[7] .[8][9] பொக்காராவிலிருந்து தெற்கே 4. 4 கிலோ மீட்டர் தொலைவில் பெவா ஏரி அமைந்துள்ளது.
பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.<[10]
Remove ads
தட்ப வெப்பம்
கோடைக் காலத்தில் அதிக பட்சம் 25 முதல் 33 பாகை செல்சியல் வெப்பமும், குளிர் காலத்தில் 2 முதல் 15 பாகை வெப்பமும் காணப்படுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 இன்ச் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.
Remove ads
வரலாறு

மத்தியகாலத்தில், சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையே வணிகத்திற்கு பொக்காரா நகரம் முக்கிய வழியாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தில், கஸ்கி குறுநில மன்னராட்சியில் ஒரு பகுதியாக பொக்காரே இருந்தது.[12]
வழிபாட்டுத் தலங்கள்



பொக்காராவில் இந்து கோயில்களும் மற்றும் பௌத்த மடாலயங்களும் அருஅருகே காணப்படுகிறது.[13][14] சில முக்கிய கோயில்கள்;
- பொக்காரா சாந்தி தூபி
- வராகி கோயில், பெவா ஏரி
- விந்தியவாசினி கோயில்
- உலக அமைதிக்கான மடாலயம்
- இராதாகிருஷ்ணன் கோயில்
சுற்றுலா & பொருளாதாரம்

திபெத்தை 1950இல் சீனா ஆக்கிரமிப்பு செய்த பிறகு மற்றும் 1962இல் நடந்த இந்திய-சீனப் போருக்கு பிறகு, சீனாவிலிருந்து பொக்காரா வழியாக இந்தியாவிற்கான வணிகம் முழுவதும் குறைந்து விட்டது. தற்போது நேபாளத்தின் மிகப்பெரும் பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாக பொக்காரா விளங்குகிறது.[15] மலையேற்றச் சுற்றுலாவும், மருத்துவச் சேவையும் பொக்காராவின் பொருளாதாரதிற்கான மூலமாக உள்ளது.[16] பொக்காரா நகரத்தில் 305 தங்கும் விடுதிகளில், இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகளும், ஐந்து மூன்று நட்சத்திர விடுதிகளும், 15 இரண்டு நட்சத்திர விடுதிகளும் உள்ளன.[17] மத்திய காலத்தில் கட்டப்பட்ட வராகி கோயில், விந்தியவாசினி கோயில், சிதாதேவி கோயில் முதலிய இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்திய ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
சுற்றுலா பயணிகள் வருகை
Remove ads
உணவகங்கள் & தங்குமிடங்கள்
பொக்காராவில் 250க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் கொண்டுள்ளது.[23] பொக்காராவில் இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளது.
மலையேற்றப் பயிற்சிக் களங்கள்
நேபாள நாட்டில் பொக்காரா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு மலையேற்ற பயிற்சி நிலையங்கள் உள்ளது. இந்நிலையத்தின் மூலம் அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு மலைகளில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து வசதிகள்
நகரப் போக்குவரத்து வசதிகள்
நகரம், நகர்புறங்களில் மற்றும் அருகில் அமைந்த கிராமப்புறங்களில் அரசு பேருந்துகளும், சிற்றுந்து வசதிகள் உள்ளது.
மற்ற நகரங்களிடையே
நேபாளத்தின் மற்ற காத்மாண்டூ உட்பட பல நகரங்களை இணைக்க பொக்காரவிலிருந்து, பேருந்து மற்றும் விமான சேவைகள் உள்ளது. பொக்காராவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.[24]
ஆறுகளும் ஏரிகளும்


பொக்காரா நீர் வளம் கொண்டது. முக்கிய நீர் நிலைகள்;[25][26]
ஏரிகள்

- பெவா ஏரி
- பெக்னாஸ் ஏரி
- ரூபா ஏரி
ஆறுகள்
- சேதி கண்டகி ஆறு
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads