காஸ்கி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஸ்கி மாவட்டம், (Kaski District) (நேபாளி: कास्की जिल्ला ⓘ, நேபாளத்தின், நேபாள மாநில எண் 4ல் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பொக்காரா நகரம் ஆகும்.


காஸ்கி மாவட்டம் 2,017 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 4,92,098 ஆக உள்ளது. இம்மாவட்டம் இமயமலையில் 450 மீட்டர் உயரம் முதல் 8,091 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது.
காஸ்கி மாவட்டம் முப்பத்தி இரண்டு கிராம வளர்ச்சி மன்றங்களையும், இரண்டு நகராட்சிகளையும், நான்கு நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ளது.[1]
இம்மாவட்டம் அண்ணபூர்ணா மலைத் தொடர்களின் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் ஏழாயிரம் மீட்டர்களுக்கும் மேல் உயரமுள்ள கொடுமுடிகள் கொண்ட மச்சபூச்சர மலை உள்ளிட்ட 11 மலைகள் உள்ளது. மலையேற்ற வீரர்களின் சிறந்த பயிற்சி களமாக இம்மாவட்டம் திகழ்கிறது.
இம்மாவட்டத்தில் சேட்டி கண்டகி ஆறு, மோதி மற்றும் மடி ஆறுகள் பாய்கிறது. மாவட்டத் தலைநகரான பொக்காரா நகரம் சிறந்த சுற்றுலாத் தலம் ஆகும்.
Remove ads
வரலாறு
காஸ்கி பகுதியை 1200 முதல் நேவாரிகளான மல்லர் வம்சத்தினர் ஆண்டனர். 1768ல் ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா காஸ்கியைக் கைப்பற்றி நேபாள இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார். பின்னர் காஸ்கி மற்றும் லம்சூங் பகுதிகளுக்கு நேபாள மன்னர்களின் பரம்பரை பிரதம அமைச்சர்களாக இருந்த ராண வம்சத்தை நிறுவிய ஜங் பகதூர் ராணாவும், அவரது ராணா வம்ச பிரதம அமைச்சர்களும் 1951 முடிய ஆண்டனர்.
நிர்வாகம்


காஸ்கி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளை நிர்வகிப்பதற்கு மாவட்ட வளர்ச்சி மன்றம், மாவட்டத் தலைநகரான பொக்காராவில் இயங்குகிறது. இம்மாவட்டத்தில் பொக்காரா-லெக்நாத் மாநகராட்சியும், ஒரு நகர்புற நகராட்சியும், 53 கிராமிய நகராட்சி மன்றங்களும் உள்ளது.
பண்பாடு
குரூங் மக்கள், சேத்திரிகள் , நேவார் மக்கள், தக்களி மக்கள், குமால் மக்கள் போன்ற பல்வேறு இனக் குழுக்கள் வாழும் காஸ்கி மாவட்டத்தில், பல்வேறு மொழி பேசும் மக்கள் இந்து மற்றும் பௌத்த சமயங்கள் பின்பற்றினாலும், சாதி அடிப்படையில் மக்களின் உணவு, உடைகள், நடனங்கள், இருப்பிடங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் மாறியுள்ளது. 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காஸ்கி மாவட்டத்தில் எண்பத்தி நான்கு சாதிகளும், நாற்பத்தி நான்கு மொழிகளும், பதினொன்று சமயங்களும் பயிலப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இம்மக்களின் அன்றாட முக்கிய உணவு பருப்புச் சாதம் ஆகும்.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
Remove ads
இதனையும் காண்க
- பொக்காரா பள்ளத்தாக்கு
- பொக்காரா சாந்தி தூபி
- பொக்காரா
- லெக்நாத்
- மச்சபூச்சர மலை
- நேபாளத்தின் மாவட்டங்கள்
- நேபாள மாநிலங்கள்
- காஸ்கி மாவட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads