மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்

ஒரு பிரளய காலத்தில் வெள்ளத்தால் மதுரை மூழ்கியபோது ஆதிகேசவன் என்ற பாம்பு கிழக்கு எல்லையாக காட From Wikipedia, the free encyclopedia

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்
Remove ads

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், (Madapuram Bhadrakali Temple) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

Thumb
மடப்புரம் பத்திரகாளியம்மன்
Thumb
கோயில் பூசை நேரங்கள்

கோயில்

இங்கு காளி திறந்த வெளியில் நின்ற நிலையில் உள்ளாள். வலக்கையில் பற்றிய திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்கு பின்றம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது. குதிரை காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாக தன் பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள் மீது வைத்துள்ளன.[1] இங்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு காளிக்கு அலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.

மடப்புரம் கோயிலின் மூலக் கடவுளாக இருக்கவர் அடைக்கலம் காத்த ஐயனார் ஆவார். ஐயனாருக்கு இருபுறமும் தலையை அரித்து பலியிட்டுக் கொள்ளும் நவகண்ட சிற்பங்கள் உள்ளன. ஐயனாரின் கருவறையில் சப்தகன்னியரும் உள்ளனர். இந்தக் கோயில் வளாகத்தில் அடைக்கலம் காத்த ஐயனார், பத்திர காளியுடன் சின்ன அடைக்கலம் காத்த சுவாமி, சின்னு, வீரபத்திரன், காணியாண்ட பெருமாள், ஐயனார், கருப்பண்ணசாமி, வினை தீர்க்கும் செல்வ விநாயகர் ஆகியோர் தனித்தனி சிற்றாலயங்களில் அருள்பாலிக்கிறார்கள்.[2][3]

Remove ads

வழிபாடு

இக்கோயிலில் நாள்தோறும் இருகால பூசை நடக்கிறது. காலை ஆறு மணிக்கு கோயில் திறந்து இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. சித்திரை வருடப் பிறப்பு, நடு ஆடி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை, தைப் பொங்கல், சிவராத்திரி ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

காசுவெட்டிப் போடுதல்

கொடுக்கல் வாங்கள் சிக்கல், சொத்து தகராறு, குடும்ப சண்டை போன்றவற்றில் நீதி கிடைக்காது ஏமார்ந்தவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து நீதியின் தேவதையாக காளியை கருதி அவள் முன்னால் காசு வெட்டிப்போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது. காளியிடம் முறையிட்டபின்னர் கிழக்கு வாசல் வழியாக அவர்கள் வெளியேறுவர்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads