மணல்மேடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[3][4][5] மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

சீர்காழி - கும்பகோணம் சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, வைத்தீஸ்வரன் கோயில் 10 கி.மீ; கும்பகோணம் 30 கி.மீ; மயிலாடுதுறை 18 கி.மீ.; காட்டுமன்னார்கோயில் 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் மயிலாடுதுறையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.72% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர்.[7] [8]

மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.[சான்று தேவை]

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

அருகமைந்த கிராமங்கள்

  • வல்லம்
  • பாப்பாக்குடி
  • பெரிய இலுப்பபட்டு
  • சின்ன இலுப்பபட்டு
  • இலுப்பபட்டு
  • ராஜசூரியன்பேட்டை
  • வையாபுரிதிடல்
  • மணல்மேடு
  • அகரமணல்மேடு
  • இராதாநல்லூர்
  • விருதங்கநல்லூர்

ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும்.

புகழ் பெற்றவர்கள்

  • மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.
  • மணல்மேட்டிற்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார்.

ஆலயங்கள்

  • திருநீலகண்டேஸ்வரர், படிக்கரைநாதர்
  • இலுப்பைப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை)

என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30-ஆவது தலம்.

  • மாரியம்மன் கோயில்
மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர். இந்தக் கோயில் வைத்தீசுவரன்கோயிலில் இருந்து பந்தநல்லூர் வழியாக கும்பகோணத்திற்கு செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads