நா. முத்துக்குமார்

கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா From Wikipedia, the free encyclopedia

நா. முத்துக்குமார்
Remove ads

நா. முத்துக்குமார் (Na. Muthukumar; 12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர்.

விரைவான உண்மைகள் நா. முத்துக்குமார், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர்.[3] நான்கு வயதில் தாயை இழந்தவர்.[4] சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

கல்வி

காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரைப் படித்துத் தேறினார். பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இயல்பியல் பயின்று 88% மதிப்பெண் பெற்று அறிவியல் இளவர் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இவர் எழுதிய தூர் என்ற கவிதையே முதுகலையில் இவருக்குப் பாடமாக இருந்தது. பின்னர் "தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 1990 முதல் 2000 வரை" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார்.[5]

Remove ads

பணி

தொடக்கத்தில் திரைப்பட இயக்குநராக சென்னை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் இணைய விண்ணப்பித்தார். ஆனால், இடங்கிடைக்கவில்லை.[6]

எனவே, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். இயக்குநர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007),வாரணம் ஆயிரம் (2008) ஆகியன போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியிருந்த இவர் [7], 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.[8]

இவர் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியில் ஜீவலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலட்சுமி என்ற மகளும் இருந்தனர்.

மறைவு

2016 ஆகத்து 14 அன்று காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.[9][10]

இயற்றிய பாடல்களில் சில

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

படைப்புகள்

இவர் பாட்டெழுதிய சில திரைப்படங்கள்:

Remove ads

நூல்கள்

கவிதைத்தொகுப்புகள்

  1. நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)[11]
  2. பட்டாம்பூச்சி விற்பவன்
  3. ஆணா ஆவண்ணா
  4. என்னை சந்திக்க கனவில் வராதே
  5. குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
  6. தூசிகள்

புதினம்

  1. சில்க் சிட்டி

கட்டுரைத் தொகுப்புகள்

  • கிராமம் நகரம் மாநகரம்[12]
  1. பால காண்டம்
  2. வேடிக்கை பார்ப்பவன்
  3. அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரைத்தொடர்)

விருதுகள்

  • 2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது[13]
  • 2006: வெயில் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
  • 2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
  • 2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
  • 2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads