இரா. சு. மனோகர்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

இரா. சு. மனோகர்
Remove ads

இராசிபுரம். சுப்ரமணியன் ஐயர். மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (R. S. Manohar; 29 சூன் 1925 - 10 சனவரி 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

விரைவான உண்மைகள் இராசிபுரம் சுப்ரமணியன் மனோகர், பிறப்பு ...
Remove ads

இளமைக்காலம்

இராசிபுரம் சுப்ரமணியன் ஐயர் மனோகர், 1925-ஆம் ஆண்டு சூன் 29-ஆம் தேதி அன்றைய சேலம் மாவட்டம், ராசிபுரத்தில், பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணத்தில் சுப்ரமணியன் ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமிநரசிம்மன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.

Remove ads

குறிப்பிட்ட சில திரைப்படங்கள்

நாடகங்கள்

மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

விருதுகள்

இசைப்பேரறிஞர் விருது, 1987. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads