மன்னன் (திரைப்படம்)
பி. வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னன் (Mannan) 1992-ஆம் ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1986இல் ராஜ்குமாரின் நடிப்பில் வெளியான அனுராகா அரலித்து என்ற கன்னட படத்தின் மீளுருவாக்கமாகும்.
Remove ads
நடிகர்கள்
- ரஜினிகாந்த் — கிருஷ்ணன்
- விஜயசாந்தி — சாந்தி தேவி
- குஷ்பூ — மீனா
- கவுண்டமணி — முத்து
- விசு — விஸ்வநாதன்
- மனோரமா — அழகி
- பண்டரி பாய் — பார்வதியம்மாள் (கிருஷ்ணனின் தாயார்)
- பிரதாபசந்திரன் — ராகவன்
- சரத் சக்சேனா — சதிஷ்
- வி. கே. ராமசாமி — மீனாவின் தந்தை
- பிரபு — சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா, அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார். இந்தப் படத்தில் "அடிக்குது குளிரு" பாடல் மூலம் பின்னணிப் பாடகராக ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த பாடல் கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[2][3]
Remove ads
வெளியீடும் வரவேற்பும்
பொங்கல் பண்டிகையின் போது 15 ஜனவரி 1992 அன்று மன்னன் வெளியிடப்பட்டது . திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads