மர நெட்டைக்காலி

From Wikipedia, the free encyclopedia

மர நெட்டைக்காலி
Remove ads

மர நெட்டைக்காலி (ஆந்தசு திரிவியாலிசு) என்பது சிறிய குருவி பறவை சிற்றினமாகும். இது ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், பாலேர்டிக் பகுதியிலும் கிழக்கு சைபீரியன் மலைகள் வரை கிழக்கே இனப்பெருக்கம் செய்கிறது. இது ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவிற்குக் குளிர்காலத்தில் வலசைபோகும். இதனுடைய விலங்கியல் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. ஆந்தசு என்பது புல்வெளிகளின் காணப்படும் பறவை என்பதும், சிற்றினப் பெயரான திரிவியாலிசு என்றால் "பொதுவானது" என்றும் பொருள். எனவே இது புல்வெளிகளில் காணப்படும் பறவையாகும்.

விரைவான உண்மைகள் மர நெட்டைக்காலி, காப்பு நிலை ...
Thumb
ராஜ்கோட்டில்
Remove ads

வகைபாட்டியல்

சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் 1758ஆம் ஆண்டில் சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் அலாடா ட்ரிவியாலிசு என்ற இருசொற் பெயரின் கீழ் முறைப்படி விவரிக்கப்பட்டது. இந்தச் சிற்றினம் சுவீடனில் காணப்பட்டதாக லின்னேயஸ் குறிப்பிட்டுள்ளார். திரிவியலிஸ் என்ற குறிப்பிட்ட அடைமொழி இலத்தீன் மொழியில் "பொது" அல்லது "சாதாரண" என்று பொருள்படும். இலத்தீன் திரிவியம் என்பதன் பொருள் "பொது தெரு". 1805ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்கையியலாளர் சோகன் மாத்தூசு பெக்சுடீனால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தசு பேரினத்தில் இப்போது மர நெட்டைக்காலி வைக்கப்பட்டது.[2]

இரண்டு துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை: [2]

  • ஆ. தி. திரிவியாலிசு (லின்னேயஸ், 1758) - ஐரோப்பா முழுவதும் தென்மேற்கு சைபீரியா, வடக்கு ஈரான் மற்றும் துருக்கி, கிழக்கு கசகசுதான், தென்மத்திய சைபீரியா, மங்கோலியா மற்றும் வடமேற்கு சீனா வரை இனப்பெருக்கம் செய்கிறது; இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் குளிர்காலம்
  • ஆ. தி. கரிங்டோனி விதர்பி, 1917 - வடமேற்கு இமயமலையில் இனப்பெருக்கம்; மத்திய இந்தியாவில் குளிர்காலம்
Remove ads

விளக்கம்

மர நெட்டைக்காலி ஒரு சிறிய நெட்டைக்காலியாகும். இது புல்வெளி நெட்டைக்காலியினை ஒத்திருக்கிறது. இது ஒரு பிரித்தறியப்படாத தோற்றமுடைய சிற்றினமாகும். இதன் மேலே பழுப்பு நிறக் கோடுகள் மற்றும் வெள்ளை வயிற்றில் கருப்பு அடையாளங்களுடன் பருத்த மார்பகங்களுடன் காணப்படும். புல்வெளி நெட்டைக்காலியிலிருந்து இதனை, கனமான அலகு மற்றும் மார்பக மற்றும் வெள்ளை வயிறு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு மூலம் வேறுபடுத்தப்படுத்தலாம். மர நெட்டைக்காலிகள் மிக எளிதாக மரங்களில் அமரும்.

மர நெட்டைக்காலியினுடைய அழைப்பானது, இதனுடன் நெருங்கிய சிற்றினங்களின் அழைப்பைப் போலல்லாமல் ஒரு வலுவானது. பறவை ஒரு மரத்திலிருந்து சிறிது தூரம் மேலே எழும்பி, பின்னர் விறைப்பான இறக்கைகளின் மூலம் வான்குடையமைத்து கீழே இறங்குகிறது.

மர நெட்டைக்காலி, திறந்த காடு மற்றும் குறுங்காடுகளில் வாழ்கின்றன. கூடுகளைத் தரையில் அமைக்கின்றன. 4 முதல் 8 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த சிற்றினம் இதன் உறவினர்களைப் போலவே பூச்சிகளை உண்ணும். விதைகளையும் உண்ணும்.

Remove ads

வாழ்க்கை சுழற்சி

  • செப்டம்பர் நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை: துணை சகாரா ஆப்பிரிக்காவில் வாழும்
  • ஏப்ரல் நடுப்பகுதி முதல் மே ஆரம்பம் வரை: ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு வலசைப்போகும்
  • மே தொடக்கத்திலிருந்து ஆகத்து வரை: இனப்பெருக்க காலம், இரண்டு குஞ்சுகள்
  • ஆகத்து முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை: மீண்டும் சஹாரா ஆப்பிரிக்காவுக்குப் பறக்கிறது

மேலாண்மை மற்றும் பாதுகாப்பு

மர நெட்டைக்காலி, தாழ் நில தரிசு மற்றும் மறுதளிர்ப்புக் காடுகள் உள்ளிட்ட மரங்களிலான வாழ்விடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பெரும்பாலும் கரம்பை நிலம் அல்லது திறந்த ஓக் வனப்பகுதியின் எல்லையில் உள்ள பிர்ச் வனப்பகுதியில் காணப்படுகின்றன. இவை குறைந்த விதானமுடைய நடுத்தர அளவிலான மரங்களையே விரும்புகின்றன. இங்கு குறைந்த வளரும் குறுங்காடாகவும், முட்புதர்கள் 2 மீட்டருக்கும் குறைவான உயரமாகவும் இருக்கும். இதனால் கிடைமட்டத் தெரிவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். இவை புல் மற்றும் முட்செடி நிறைந்த பகுதிகளை விரும்பு. இவை மிதமான மேய்ச்சல் பகுதியினை விரும்பப்படுகிறது. புதர்வெளிகளும் மதிப்புமிக்கவை, மேலும் நீரோடைகளையும் இவை விரும்பப்படுகின்றன.

மர நெட்டைக்காலி, புல் அல்லது புதர்க்காட்டு பகுதிகளை வந்தடைந்ததும் இந்த புதர்களுக்கு மத்தியில் தரையில் கூடு கட்டுகின்றன. இவை இங்கு காணப்படும் தாவரங்களைச் சார்ந்துள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளை உண்ணுகின்றன.

மர நெட்டைக்காலி, பரவலாகக் காணப்படும் மரங்களில் அமர்ந்து ஒலியெலுப்பும்.[3]

பாதுகாப்புக்கு நிதி

வனவியல் ஆணையம் இங்கிலாந்தின் கானக மானியம் என்ற திட்டத்தின் கீழ் நிதி வழங்கி இதனைப் பாதுகாத்து வருகிறது.

Remove ads

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads