மலாக்கா செங் கோ கலைக்கூடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாக்கா செங் கோ கலைக்கூடம் மலாய்: Galeri Laksamana Cheng Ho; ஆங்கிலம்:Gallery of Admiral Cheng Ho; சீனம்: 郑和海军上将画廊; பின்யின்: Zhèng Hé wénwù jìniàn láng) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். சீனா நாட்டின் கடற்படைத் தளபதியும்; நாடுகாண் பயணியுமான செங் கோ (Admiral Cheng Ho) என்பவரின் நினைவாக, மலாக்கா மாநகரில் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் கலைக்கூடம் என அறியப்படுகிறது.
பிப்ரவரி 2003-இல் திறக்கப்பட்ட இந்தக் கலைக்கூடம், மலாக்கா மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியுடன் தொடர்புடையது.[1][2]
Remove ads
பொது
தென்கிழக்கு ஆசியாவிற்கான செங் கோவின் பயணங்களை அந்தக் கலைக்கூடம் ஓவியங்கள் மூலமாக காட்சிப் படுத்துகிறது. பன்னாட்டு உறவுகளில் செங் கோ ஒரு மரபு மனிதராகச் சித்தரிக்கப்படுகிறார். அவர் மிங் அரசமரபு அரசியல் உறவுமுறைத் தொடர்புகளை; ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வலுவான முறையில் உருவாக்கி கொடுத்தவராகும்.[3]
மிங் அரசமரபு (Ming dynasty) என்பது 1368 -1644-ஆம் ஆண்டுகளில் சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும். மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத்தன்மையும் கொண்டதாக மிங் அரசமரபு கருதப்படுகிறது.[4].
கடற்படைத் தளபதி செங் கோ
கடற்படைத் தளபதி செங் கோ, உலகின் பெரும்பகுதிகளுக்கு கடற்பயணங்களை மேற்கொண்டுள்ளார். மலாக்கா நீரிணையில் பயணிக்கும் போது மலாக்கா, புலாவ் பெசார் தீவில் ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும் வரலாற்றுப் பதிவுகளின் மூலமாக அறியப்படுகிறது.
மலாக்கா, புரூணை, ஜாவா, தாய்லாந்து, தென்கிழக்காசியா, இந்தியா, ஆப்பிரிக்கா, அராபியத் தீபகற்பம் முதலான இடங்களுக்குச் சென்ற செங் கோ; சீனாவிற்குப் பெரும் அளவில் திறைச் செல்வங்களை ஈர்த்து வந்தார்.[5]
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
- மலாக்கா சுற்றுலா இடங்கள்
- டேமாங் அப்துல் கனி கலைக்கூடம்
- மலாக்கா செங் கோ கலாசார அருங்காட்சியகம்
- மலாக்கா பாபா நோன்யா பாரம்பரிய அருங்காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
