மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் அல்லது மலாயா கூட்டமைப்பு மாநிலங்களுக்கான உயர் ஆணையர் ஆங்கிலம்: High Commissioner for the Federated Malay States; மலாய்: Pesuruhjaya Tinggi Negeri-negeri Melayu Bersekutu) எனும் பதவி 1896 இல், உருவாக்கப்பட்டது. மலாயாவின் உயர் ஆணையர் என்பவர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் பிரித்தானிய அரசாங்கப் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) என்பது 1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில், தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். அந்த நான்கு மாநிலங்களும் பிரித்தானிய மலாயா நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன.[1]
Remove ads
பொது
மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரின் அதிகாரப்பூர்வ இல்லம் மன்னர் மாளிகை என அழைக்கப்பட்டது. இது இப்போது கார்கோசா செரி நெகாரா என்ற தங்கும் விடுதியின் ஒரு பகுதியாக உள்ளது. உயர் ஆணையரின் மாளிகை கோலாலம்பூர் பெர்தானா தாவரவியல் பூங்காவில் இருந்தது.
அந்த நேரத்தில் கோலாலம்பூர் மாநகரம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைநகராக இருந்தது. உயர் ஆணையரின் மாளிகை, அரச பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஒரு முக்கிய இடமாக செயல்பட்டது.
இசுதானா சிங்கப்பூர்
நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர், அந்தக் காலக்கட்டத்தில், மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரின் அலுவலகத்தில் தனியான ஒரு நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்தார். ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம் சிங்கப்பூரில் இருந்தது. அந்த நேரத்தில் காலனிய சிங்கப்பூர், நீரிணை குடியேற்றங்களின் தலைநகராகவும் இருந்தது.
நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் மாளிகை, அரசு மாளிகை என்று அழைக்கப்பட்டது. இப்போது அது சிங்கப்பூர் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான இசுதானா சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது.
மலாயா ஒன்றியம்
பெர்லிஸ், கெடா, கிளாந்தான், திராங்கானு, மற்றும் ஜொகூர் ஆகிய ஐந்து மாநிலங்களும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் பிரித்தானிய அரசாங்கம் ஓர் ஆலோசகரால் பிரதிநிதிக்கப்பட்டது.[2]
நீரிணை குடியேற்றங்கள் 1946-இல் கலைக்கப்பட்டது. சிங்கப்பூர் அதன் சொந்த உரிமை அடிப்படையில், தனித்த நிலையிலான முடியாட்சி காலனி ஆனது. மீதமுள்ள இரு நீரிணை குடியேற்றப் பகுதிகள்; (அதாவது பினாங்கு மற்றும் மலாக்கா) ஆகிய இரு பகுதிகளும் பெர்லிஸ், கெடா, கிளாந்தான், திராங்கானு மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு மலாயா ஒன்றியம் எனும் புதிய அமைப்பாக உருவாக்கம் கண்டன..[3]
கூட்டாட்சி மலாய் மாநிலங்களான பெர்லிஸ், கெடா, கிளாந்தான், திராங்கானு மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள பூர்வீக ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு விட்டுக் கொடுத்தனர். இதனால் இந்தப் பிரதேசங்கள் பிரித்தானிய காலனிகளாக மாறின. மலாயா ஒன்றியம் எனும் புதிய முடியாட்சி காலனிக்கு ஓர் ஆளுநர் தலைமை தாங்கினார். அவர்தான் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் ஆவார்.[4]
Remove ads
விளக்கம்
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
- மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
(Federated Malay States) (FMS) - (Protectorate States)
மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
- மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
(Unfederated Malay States) - (Protected States)
நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்
- நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்
(Straits Settlements) (Crown Colony States)
Remove ads
உயர் ஆணையர்கள் மற்றும் ஆளுநர்களின் பட்டியல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads