மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989)
மலேசியாவில் நடந்த ஆயுத மோதல் (1968 - 1989) From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) அல்லது மலேசியாவின் இரண்டாவது அவசரகாலம் (ஆங்கிலம்: Communist insurgency in Malaysia அல்லது (Second Malayan Emergency); மலாய்: Kebangkitan Semula Pengganas Komunis (1968-1989); சீனம்: 马来亚共产党叛乱 (1968年-1989年) என்பது 1968-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரையில், மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Malayan Communist Party) (MCP); மலேசியக் கூட்டரசு பாதுகாப்புப் படைகளுக்கும் (Malaysian Federal Security Forces) இடையே; மலேசியாவில் நடந்த ஆயுத மோதலைக் குறிப்பிடுவதாகும்.
1960-ஆம் ஆண்டில் மலாயா அவசரகாலம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆயுதப் பிரிவான மலாயா தேசிய விடுதலை இராணுவம் (Malayan National Liberation Army) (MNLA), மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு (Malaysian-Thailand Border) பின்வாங்கியது.
பின்னர் மலேசிய அரசாங்கத்திற்கு எதிரான எதிர்காலத் தாக்குதல்களுக்காக மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு; மீண்டும் பயிற்சி பெற்றது. மலேசியாவில் நடந்த இந்தக் கம்யூனிசக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், பெரும்பாலோர் சீனர்கள் ஆகும்.
Remove ads
பொது
1968-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பேராக், குரோ (Kroh) எனும் இடத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்த மலேசியப் பாதுகாப்புப் படைகளின் மீது மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினர் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் இருதரப்புகளுக்கும் இடையே மீண்டும் பகை மூண்டது. இதன் தொடர்ச்சியே மலேசியாவில் இரண்டாவதாக நடைபெற்ற மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) ஆகும். முதலாவது கிளர்ச்சி 1960-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த மலாயா அவசரகாலம் என்று அறியப்படுகிறது.
வியட்நாம் போர்
இந்தக் கட்டத்தில் வியட்நாம் போர் காரணமாக தென்கிழக்காசியாவில் இராணுவப் பதட்டங்கள் நிலவி வந்தன. அதன் தொடர்ச்சியாக குரோவில் நடந்த மோதலினால், தீபகற்ப மலேசியாவில் உள்ள மலாய் மக்களுக்கும் மற்றும் சீனர்களுக்கும் இடையே நிலவி வந்த உள்நாட்டு பதட்டங்கள், மேலும் அதிகரிக்கலாம் எனும் நிலைமை ஏற்பட்டது.[26]
மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கு (Malayan Communist Party) மக்கள் சீனக் குடியரசில் (People's Republic of China) இருந்து ஓரளவிற்கு ஆதரவு கிடைத்தது. இருப்பினும் 1974 சூன் மாதம், மலேசியா மற்றும் சீனா அரசாங்கங்கள் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அதன் விளைவாக மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கு மக்கள் சீனக் குடியரசினால் கிடைத்து வந்த ஆதரவும் முடிவுக்கு வந்தது.[3][27]
மலாயா கம்யூனிச கட்சியில் பிளவு
1970-ஆம் ஆண்டில், மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஒரு பிளவை சந்தித்தது. அதன் விளைவாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது:
- மலாயா மார்க்சிச-லெனினிச கம்யூனிச கட்சி (ஆங்கிலம்: (Communist Party of Malaya/Marxist–Leninist) (CPM-ML); மலாய்: (Parti Komunis Malaya–Marxist–Leninis)
- மலாயா கம்யூனிச புரட்சி கட்சி (ஆங்கிலம்: (Communist Party of Malaya/Revolutionary Faction) (CPM–RF); மலாய்: (Parti Komunis Malaya/Puak Revolusi)[28]
மலாய் இனத்தவர்கள் மலாயா கம்யூனிச கட்சியில் பங்கு எடுத்துக் கொள்வதற்கு பலமுறை முயற்சிகள் செய்யப்பட்டன. இருந்த போதிலும், அவர்களின் ஆதரவு அதிகமாகக் கிடைக்கவில்லை. கிளர்ச்சி காலம் முழுவதும் மலேசிய சீனர்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்பட்டது.[3]
மலேசிய அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை
1960-ஆம் ஆண்டுகளில், மலாயாவின் முதல் கம்யூனிசக் கிளர்ச்சியின் போது மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் மலாயாவில் அவசரகால நிலையை (State of Emergency) அறிவித்தார்கள். பிரிக்சு திட்டம் (Briggs Plan) ; மலாயா புதுக்கிராமங்கள் திட்டம் (New Villages); மூலமாக ஓரளவிற்கு வெற்றியும் பெற்றார்கள். இரண்டாவது கிளர்ச்சியின் போது மலேசிய அரசாங்கம் அந்த மாதிரியான செயல்பாட்டில் ஈடுபடவில்லை.
அவசரகால நிலைக்குப் பதிலாக, கெசுபான் (KESBAN) எனும் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டம்; உருக்குன் நெகாரா (Rukun Tetangga); ரேலா தொண்டூழியம் (People's Volunteer Group) (RELA Corps); (மக்கள் தன்னார்வ குழு) போன்ற முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் மலேசிய அரசாங்கம் வெற்றியும் பெற்றது.[29]
அட் யாய் அமைதி ஒப்பந்தம்
1989 டிசம்பர் 2-ஆம் தேதி, மலாயா கம்யூனிஸ்டு கட்சி; மலேசிய அரசாங்கத்துடன் தெற்கு தாய்லாந்தில் உள்ள அட் யாய் (Hat Yai) நகரில், அட் யாய் அமைதி உடன்படிக்கையை (Peace Agreement of Hat Yai 1989) செய்து கொண்டது. அந்த நிகழ்ச்சிப் பிறகு மலேசியாவின் இரண்டாவது கம்யூனிசக் கிளர்ச்சியும் ஒரு முடிவுக்கு வந்தது.[30]
சரவாக் கம்யூனிச கிளர்ச்சி
தீபகற்ப மலேசியாவில் 1968-ஆம் ஆண்டில் உருவான மலேசியாவின் இரண்டாவது கம்யூனிசக் கிளர்ச்சியைத் (Communist insurgency in Malaysia (1968–89) தவிர, போர்னியோ தீவில் உள்ள மலேசிய மாநிலமான சரவாக் மாநிலத்திலும் மற்றொரு கிளர்ச்சி உருவானது.
அதற்கு சரவாக் கம்யூனிச கிளர்ச்சி (ஆங்கிலம்: Communist Insurgency in Sarawak (MA63); என்று பெயர். 1962--ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.[31]
இந்தக் கிளர்ச்சி இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சிக்கும் (North Kalimantan Communist Party) மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கும் (Malaysian Government) இடையே நடந்தது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
நூல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads