மலேசிய உயர்நீதிமன்றம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசிய உயர்நீதிமன்றம் (மலாய்: Mahkamah Tinggi Malaysia; ஆங்கிலம்: High Court of Malaysia) என்பது மலேசிய நீதித்துறை அமைப்பில் உள்ள ஓர் உயர்நீதிமன்றமாகும். நீதித்துறைப் படிநிலை அமைப்பில் மூன்றாவது நிலையில் உள்ளது. மலாயா உயர்நீதிமன்றம் மற்றும் சபா சரவாக் உயர்நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களும் ஒருங்கிணைந்த நிலையில் மலேசிய உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் மலேசிய உயர்நீதிமன்றம், நிறுவப்பட்டது ...

நீதித்துறைப் படிநிலை அமைப்பில் முதலாவதாக வருவது மலேசிய உச்சநீதிமன்றம். அதற்கு அடுத்த நிலையில் இரண்டாவதாக வருவது மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம். மூன்றாவது நிலையில் வருவது மலேசிய உயர்நீதிமன்றம்.

மலேசிய அரசியலமைப்பின் பிரிவு 121 (Article 121 of the Constitution of Malaysia), ஒருங்கிணைப்பு அதிகார வரம்பின் கீழ்; மலாயா உயர்நீதிமன்றம் (High Court of Malaya); மற்றும் சபா சரவாக் உயர்நீதிமன்றம் (High Court of Sabah and Sarawak) என இரண்டு உயர் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்று அதிகாரம் வழங்கப்படுகிறது.

1994-க்கு முன்னர், சபா சரவாக் உயர்நீதிமன்றம் என்பது போர்னியோ உயர் நீதிமன்றம் (High Court of Borneo) என்று அழைக்கப்பட்டது. 1969-க்கு முன்னர், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் (High Court of Singapore); மலேசிய நீதிமன்ற அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது.[1]

Remove ads

பொது

மலாயா உயர் நீதிமன்றத்தின் முதன்மைப் பதிவகம் கோலாலம்பூரில் உள்ளது. அதன் மற்ற பதிவகங்கள் தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. சபா சரவாக் உயர் நீதிமன்றத்தின் முதன்மைப் பதிவகம் கூச்சிங் நகரில் உள்ளது. மற்ற பதிவகங்கள் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பிற பகுதிகளில் உள்ளன.

மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மலேசிய உச்சநீதிமன்றம் ஆகியவை உயர் நீதிமன்றங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் (Magistrates' Courts) மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் (Sessions Courts); ஆகிய இரு நீதிமன்றங்களும் துணை நீதிமன்றங்களாக (Subordinate Courts) வகைப்படுத்தப் படுகின்றன.

உயர் நீதிமன்றங்கள் அசல் அதிகார வரம்பின் நீதிமன்றங்களாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றங்களாகவும் செயல்படுகின்றன. ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதியின் தலைமையின் கீழ் இயங்குகின்றன.

மலேசிய நீதித்துறை படிநிலையில், மலாயா உயர் நீதிமன்றம் மற்றும் சபா சரவாக் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தலைமை நீதிபதிகள்; மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி; ஆகியோருக்கு பிறகு மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் உள்ளனர்.

Remove ads

மலேசியாவின் உயர் நீதிமன்றப் பதிவகங்கள்

தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள்; துணை நீதிமன்றங்கள்; மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயா கூட்டரசு பிரதேசங்களின் நீதிமன்றங்கள்; ஆகியவற்றின் நீதிமன்றப் பதிவகங்கள், மலேசிய உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. இதேபோல், கிழக்கு மலேசியாவில் உள்ள அனைத்து நீதிமன்றப் பதிவகங்களும்; சபா சரவாக் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை ஆகும். இதில் லபுவான் கூட்டரசு பிரதேசத்தின் நீதிமன்றங்களும் அடங்கும்.

Remove ads

மலேசிய உயர் நீதிமன்றங்களின் அமைவிடங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads