மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் (மலாய்: Ketua Pembangkang; ஆங்கிலம்: Leader of the Opposition; சீனம்: 马来西亚国会反对党领袖) என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையான மலேசிய மக்களவையில் உள்ள எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர் ஆவார். அதாவது ஆளும் கட்சி அல்லது ஆளும் கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒருமித்த தலைவரும் ஆவார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசாங்கத்தில் எந்தப் பொறுப்புகளையும் வகிக்காத ஒருவராகவும்; மலேசிய மக்களவையில் பெரிய ஓர் எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராகவும் பொறுப்பில் இருக்க வேண்டும். மலேசிய மக்களவை அமர்வில் இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் மத்திய மக்களவை மேசையின் இடது புறத்திலும், பிரதமருக்கு எதிரேயும் அமர்ந்திருப்பார்.
Remove ads
பொது
எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற விதிகளின்படி மக்களவையின் சிறுபான்மைக் கட்சிகளினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்களவை அமர்வில் இருக்கும் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மரணம் அடைந்தால்; அல்லது பதிவித் துறப்பு செய்தால்; அல்லது அவரின் தலைமைப் பதவிக்குச் சவால் விடப்பட்டால்; ஒரு புதிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
மலேசிய நாடாளுமன்றம், மலேசியாவின் அரசமைப்பு அவையாகும். இந்த நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. எதிர்க்கட்சியானது வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசாங்கத் திட்டங்களை விமர்சிப்பது; மாற்று வரவு செலவுத் திட்டங்கள் அல்லது மாற்றுச் சட்டங்களை முன்வைப்பது; முன்மொழியப்படும் அனைத்துச் சட்டங்கள் குறித்தும் விவாதிப்பது; மற்றும் நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கவனம் செலுத்துகிறது.
எனவே எதிர்க்கட்சியானது 'காத்திருக்கும் அரசாங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சி முறைமை என்பது மக்களாட்சி அமைப்பின் முறையான ஒரு பகுதியாகும்.
நவம்பர் 2022 முதல், பெரிக்காத்தான் கூட்டணி, மலேசிய நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிரணிக் கூட்டணியாக உள்ளது. இதற்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் லிம் கிட் சியாங் ஆவார். இவர் 28 ஆண்டுகள் (1975-1999 மற்றும் 2004-2008 வரை) எதிர்க்கட்சிகளின் தலைவராகப் பணியாற்றினார்.
Remove ads
மலேசிய நாடாளுமன்றம்
மலேசிய நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மக்களவை மற்றும் மேலவை என ஈரவை முறைமையைக் கொண்டது. மலேசிய மாமன்னர் நாட்டின் தலைவர் எனும் வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கமாகக் கருதப்படுகிறார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாடாளுமன்றம் கூடுகிறது. மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவிற்கு அருகில் உள்ளது.
1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. 18 மாடிகள் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில், இரு அவைகளுக்கும் மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற மாடிகளில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.[1]
Remove ads
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல்
மலேசிய அரசியல் கட்சிகள் / கூட்டணிகள்:
மலேசிய கூட்டணி கட்சி
மலேசிய இசுலாமிய கட்சி
மலாயா தொழிலாளர் கட்சி
ஜனநாயக செயல் கட்சி
சரவாக் தேசியக் கட்சி
மக்கள் நீதிக் கட்சி
பாக்காத்தான் அரப்பான்
பாரிசான் நேசனல்
பெரிக்காத்தான் நேசனல்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads