கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Melaka; ஆங்கிலம்: Kota Melaka Federal Constituency; சீனம்: 马六甲市区国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P138) ஆகும்.[5]
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
Remove ads
மத்திய மலாக்கா மாவட்டம்
மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். இருப்பினும் கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர்தான் மத்திய மலாக்கா மாவட்டம் உருவாக்கம் பெற்றது.
மத்திய மலாக்கா மாவட்டத்தில் ஆங் துவா ஜெயா நகரம் என்பது புதிதாக உருவாக்கப்பட்ட நகரம். பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7]
மலாக்கா மாநிலத்தைப் பொருத்த வரையில் ஆங் துவா ஜெயா புறநகப்பகுதி மிகவும் முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் தான் அமைந்துள்ளது.
Remove ads
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி
Remove ads
கோத்தா மலாக்கா தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads