மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம்map
Remove ads

மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் (University of Malaysia Kelantan, மலாய்: Universiti Malaysia Kelantan) என்பது மலேசியா, கிளாந்தான், மாநிலத்தில் உள்ள ஒரு பொது பல்கலைக்கழகம்; மற்றும் மலேசியாவில் நிறுவப்பட்ட 19-ஆவது பொது உயர்கல்வி நிறுவனமும் ஆகும். 1 ஜூலை 2007-இல் அதிகாரப்பூர்வமாகத் தன் கல்விச் செயல்பாடுகளைத் தொடங்கியது.[1]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...

மலேசியாவின் ஒன்பதாவது திட்டத்தின் (Ninth Malaysia Plan) கூறுகளில் ஒன்றாக மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

Remove ads

பொது

மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமது படாவி மார்ச் 31, 2006 அன்று, மலேசிய மக்களவையில் 9-ஆவது மலேசியத் திட்டத்தை அறிவித்த போது, கிளாந்தானில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அரசாங்கத்தின் ஒப்புதலைத் தெரிவித்தார். சூன் 14, 2006 அன்று, பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மலேசிய அமைச்சரவை ஒருமித்த ஒப்புதலை வழங்கியது.

வரலாறு

மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம், 1 சூலை 2007 அன்று, கோத்தா பாரு, பெங்காலான் செப்பா புறநகர்ப் பகுதியில், ஒரு தற்காலிக வளாகத்தில் 295 மாணவர்களுடன் அதன் முதல் செயல்பாட்டைத் தொடங்கியது.[2]

தற்ப்போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் இரண்டு துணை வளாகங்கள் உள்ளன. ஒரு வளாகம் பாச்சோக் நகரில் உள்ளது. மற்றொரு வளாகம் ஜெலியில் உள்ளது.[3]

வளாகங்கள்

துறைகள்

  • ஜெலி வளாகம்
    • வேளாண் சார்ந்த துறைகள் (Faculty of Agriculture-Based Industry)
    • புவி அறிவியல் துறை (Faculty of Earth Sciences)
    • உயிர்-பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Faculty of Bio-Engineering and Technology)

* பெங்காலான் செப்பா வளாகம்

    • தொழில்முனைவு மற்றும் வணிகத் துறை (Faculty of Entrepreneurship and Business)
    • கால்நடை மருத்துவத் துறை (Faculty of Veterinary Medicine)
    • சுற்றுலா மற்றும் பொதுநலத் துறை (Faculty of Hospitality, Tourism and Wellness)
  • பாச்சோக் வளாகம்
    • படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத் துறை (Faculty of Creative Technology and Heritage)
    • மொழி ஆய்வுகள் மற்றும் மனித மேம்பாட்டுத் துறை (Faculty of Language Studies and Human Development)
    • கட்டிடக்கலைத் துறை (Faculty of Architecture)
Remove ads

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads