மலேசிய கூட்டரசு சாலை 8

தீபகற்ப மலேசியா கிழக்குப் பகுதியின் கூட்டரசு சாலை From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசிய கூட்டரசு சாலை 8 அல்லது கோலாலம்பூர் - கோத்தா பாரு நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 8 அல்லது Kuala Lumpur–Kota Bharu Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 8 அல்லது Jalan Kuala Lumpur–Kota Bharu) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியின் முக்கிய கூட்டரசு சாலையாகும். இதன் நீளம் 402.7-கி.மீ.[3]

விரைவான உண்மைகள் மலேசிய கூட்டரசு சாலை 8 Malaysia Federal Route 8 Laluan Persekutuan Malaysia 8, வழித்தடத் தகவல்கள் ...

இந்தச் சாலை தெற்கில் உள்ள பெந்தோங் நகரத்தை வடக்கே உள்ள கோத்தா பாரு நகரத்துடன் இணைக்கிறது.

இந்த நெடுஞ்சாலை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது; - கோத்தா பாருகோலா கிராய் சாலை (Kota Bharu–Kuala Krai Road); மற்றும் பெந்தோங்கோலா லிப்பிஸ் சாலை (Bentong–Kuala Lipis Road); முழு நெடுஞ்சாலையும் கட்டி முடிக்க 99 ஆண்டுகள் ஆனது.

Remove ads

பொது

மலேசிய கூட்டரசு சாலை 8-இன் கிலோமீட்டர் '0' என்பது பகாங், பெந்தோங் நகரத்தில், கோலாலம்பூர் காராக் விரைவுச்சாலை E8 -இன் (Exit 810) பரிமாற்றத்தில் தொடங்குகிறது. மலேசிய கூட்டரசு சாலை 9- உடன் இணைந்து, இந்தச் சாலை தித்திவாங்சா மலைத்தொடரின் கிழக்கு அடிவாரத்தின் வழியாகச் செல்கிறது.

கோலா லிப்பிஸ் நோக்கிச் செல்லும் இந்தச் சாலை, பின்னர் தகான் மலைத்தொடரின் மேற்கு அடிவாரத்தில் கோலா கிராய் நோக்கிச் செல்கிறது. இறுதியாக, கிளாந்தான் ஆற்றின் கிழக்குக் கரையில் அதன் வடக்கு முனையான கோத்தா பாரு வரை செல்கிறது.[4]

போக்குவரத்து நெரிசல்

மலேசிய கூட்டரசு சாலை 8, அதன் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்பெற்றது. குறிப்பாக, ஈகைத் திருநாள் காலங்களில், கோத்தா பாரு - கோலா கிராய் பிரிவில் மிகையான நெரிசலுக்கு உள்ளாகிறது.

2014 ஈகைத் திருநாள் காலத்தில் கோலாலம்பூரிலிருந்து கோத்தா பாரு வரையிலான பயண நேரம், 16 மணிநேரத்தை தாண்டியதாகவும் அறியப் படுகிறது.

Remove ads

வரலாறு

மலேசிய கூட்டரசு சாலை 8-இன் ஒரு பகுதி 80-மைல் நீளம் கொண்ட கோலா குபு - கோலா லிப்பிஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். அந்தப் பழைய நெடுஞ்சாலை பகாங் மாநிலத்தின் தொடக்கக் கால நெடுஞ்சாலையாகும், அந்தச் சாலை 1887-இல் மலேசிய பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டது.

பின்னர், 1915-இல் தெரானம் நகர் தொடங்கி பெந்தோங் வரை மேலும் ஒரு பகுதி கட்டப்பட்டது. 1958-இல் மேலும் இரண்டு துணை நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டன.[5][6] 1986-ஆம் ஆண்டில் மலேசிய கூட்டரசு சாலை 8 முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது சீரமைப்புக் கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன.[7]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads