மாச்சாங் மாவட்டம்

மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மாச்சாங் மாவட்டம்map
Remove ads

மாச்சாங் மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Machang; கிளாந்தான் மலாய் மொழி: Mache; ஆங்கிலம்: Machang District; சீனம்: 马樟县; ஜாவி: ماچڠ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் மாச்சாங் நகரம் ஆகும்.[2]

விரைவான உண்மைகள் மாச்சாங் மாவட்டம், நாடு ...

இந்த மாவட்டம் கிளாந்தான் மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கோத்தா பாரு மாவட்டம் (Kota Bharu District); கிழக்கில் பாசீர் பூத்தே மாவட்டம் (Pasir Puteh District); தென்கிழக்கில் திராங்கானு மாநிலம்; மேற்கில் தானா மேரா மாவட்டம் (Tanah Merah District) மற்றும் தெற்கில் கோலா கிராய் மாவட்டம் (Kuala Krai District) ஆகிய நிலப்பகுதிகள் எல்லைகளாக உள்ளன.

Remove ads

பொது

முன்பு உலு கிளாந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. 1949-இல், கிளாந்தான் மாநிலத்தின் தன்னாட்சி பெற்ற துணை மாவட்டமாக வரையறுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் பொருளாதார விரிவாக்கம் காரணமாக, 1952 சனவரி 1-ஆம் தேதி முழு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த மாவட்டத்தின் பெரும்பகுதி இன்னும் வேளாண் நிலமாகவே உள்ளது. இங்கு நெல் வயல்கள், செம்பனை பனை மற்றும் ரப்பர் தோட்டங்கள் நிறைய உள்ளன.

Remove ads

சுற்றுலா

மச்சாங் மாவட்டம் வெந்நீர் ஊற்றுகளுக்கு பெயர் பெற்றது. அவை அமைந்துள்ள இடங்கள்:[3] [4]

கம்போங் ரெங்காஸ் தோக் போக் (Kampung Rengas Tok Bok ) ஊத்தான் லிப்பூர் புக்கிட் பாக்கார் (Hutan Lipur Bukit Bakar) ஊத்தான் லிப்பூர் சாபாங் தோங்கா (Hutan Lipur Cabang Tongka) ஜெராம் லீனாங் நீர்வீழ்ச்சி (Air Terjun Jeram Linang)

போக்குவரத்து

மலேசிய கூட்டரசு சாலை 4 4; மலேசிய கூட்டரசு சாலை 8 8 ஆகிய கூட்டரசு சாலைகள் மாச்சாங் நகரத்தைத் தாண்டிச் செல்கின்றன.

கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) எனும் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) நகரங்களுக்கு இடையிலான தொடருந்துகள் மாச்சாங் நகரில் நிற்பது இல்லை. தொடருந்து சேவையைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் 10 கி.மீ. அப்பால் உள்ள தெமாங்கான் Temangan நகரத்திற்குச் செல்ல வேண்டும். மாச்சாங் மாவட்டத்தில் தெமாங்கான் நகரத்தில் மட்டுமே தொடருந்து நிலையம் உள்ளது.

மாச்சாங் நகரம்

மாச்சாங் நகரம், கோத்தா பாருவில் இருந்து 44 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 298 கி.மீ. தொலைவில் உள்ளது. மாச்சாங் எனும் பெயரில் கம்போங் மாச்சாங் (Kampung Machang) எனும் கிராமம் உள்ளது.

1880-ஆம் ஆண்டில் செனிக் அவாங் கெச்சிக் (Senik Awang Kecik) என்பவரின் தலைமையில் குடியேறிய ஒரு குழுவினரால் கம்போங் மாச்சாங் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் இருந்துதான் மாச்சாங் நகரமும் உருவானது.

குதிரை மாம்பழம் என்று அழைக்கப்படும் மாச்சாங் மாம்பழம் (Mangifera foetida) என்பதன் மலாய் பெயரில் இருந்து இந்த இடத்திற்குப் மாச்சாங் என்று பெயரிடப்பட்டது.[5]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads