சபா ஐக்கிய மக்கள் கட்சி
மலேசியாவின் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சபா ஐக்கிய மக்கள் கட்சி (ஆங்கிலம்: United Sabah People's Party; மலாய்: Parti Bersatu Rakyat Sabah) (PBRS) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள ஒரு சிறுபான்மை அரசியல் கட்சியாகும். தற்போது சபா ஐக்கிய மக்கள் கட்சி அதன் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப் (Arthur Joseph Kurup) தலைமையில் உள்ளது.
இதற்கு முன்னர் 1994 முதல் 2023 வரை, இந்தக் கட்சி அதன் நிறுவனர் மற்றும் அதன் முதல் தலைவரான ஜோசப் குருப் (Joseph Kurup) என்பவரால் வழிநடத்தப்பட்டது. இந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக 1994 முதல் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது. 2018 முதல் 2020 வரையிலான ஒரு குறுகிய காலத்திற்கு பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து விலகி இருந்தது.
Remove ads
பொது
11 மார்ச் 1994 அன்று, ஐக்கிய சபா கட்சியின் (United Sabah Party (PBS) உறுப்பினர்கள் சிலரைக் கொண்டு ஜோசப் குருப் என்பவரால் சபா ஐக்கிய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. 10 சூன் 1994 அன்று, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றாக இந்தக் கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1]
2018 மலேசிய பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியில் இருந்து சபா ஐக்கிய மக்கள் கட்சி வெளியேற முடிவு செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஜோசப் குருப் கூறினார். பின்னர், புதிய ஆளும் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியில் சேர விண்ணப்பித்தது.[2][3] இருப்பினும் அந்த விண்ணப்பம் பின்னர் புறக்கணிக்கப்பட்டது.[4]
Remove ads
மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022
மார்ச் 2020-இல் ஏற்பட்ட, மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022யின் காரணமாக மலேசியாவின் ஆளும் கட்சியாக இருந்த பாக்காத்தான் அரப்பான் கூட்டணி வீழ்ச்சி அடைந்தது. அதைத் தொடர்ந்து, பாரிசான் நேசனல் கூட்டணியில் இந்த சபா ஐக்கிய மக்கள் கட்சி மீண்டும் இணைந்து கொண்டது.[5][6] அப்போது இருந்து இந்தக் கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இயங்கி வருகிறது.[7][8]
மலேசிய மக்களவை
மலேசிய மக்களவையில் இந்தக் கட்சிக்கு ஓர் இடம் மட்டுமே உள்ளது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads