மலேசிய பகாங் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய பகாங் பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(University Pahang Malaysia; மலாய்: Universiti Pahang Malaysia) (UMPSA) என்பது மலேசியா, பகாங், பெக்கான் நகரில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும்.
தொடக்கத்தில் இந்தப் பல்கலைக்கழகம் மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ஆங்கிலம்:(University College of Engineering and Technology Malaysia; மலாய்: Kolej Universiti Kejuruteraan dan Teknologi Malaysia)) (UTEC / KUKTEM) எனும் பெயரில் நிறுவப்பட்டது.[2] பின்னர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகத் தகுதி உயர்த்தப்பட்டது.
28 நவம்பர் 2015 அன்று, இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது.
Remove ads
வரலாறு
2002-ஆம் ஆண்டில், மலேசிய பல்கலைக்கழகப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பகாங் வளாகம் எனும் பெயரில் மலேசிய பகாங் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு, குவாந்தான் பண்டார் இந்திரா மக்கோத்தா நகரில் ஒரு சிறிய வளாகத்தில் இருந்து இயங்கி வந்தது.[3][4]
மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் சிந்தனையின் விளைவாக இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. நஜீப் ரசாக் அப்போது மலேசிய கல்வி அமைச்சராகப் பதவியில் இருந்தார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் பெக்கான் நகரில் உள்ளது. 27 சூலை 2009-இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. முதன்மை வளாகத்தில் 10,000 மாணவர்கள் மற்றும் 2,000 கல்விப் பணியாளர்கள் வரை தங்குவதற்கான வசதிகள் உள்ளன.
Remove ads
துறைகள்
- மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை - (Faculty of Electrical and Electronics Engineering)
- இயந்திரவியல் மற்றும் தானுந்து பொறியியல் துறை - (Faculty of Mechanical and Automotive Engineering Technology)
- உற்பத்தி மற்றும் நுண் ஒளித்துகளியல் தொழில்நுட்ப துறை - (Faculty of Manufacturing and Mechatronic Engineering Technology)
- கணினியல் துறை - (Faculty of Electrical and Electronics Computing)
- நவீன மொழிகளுக்கான மையம் - (Centre for Modern Languages)
Remove ads
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
காட்சியகம்
- பல்கலைக்கழக ஏரிப் பூங்கா
- பல்கலைக்கழக ஐகோம் வளாகம்
- முதன்மை வளாகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads