மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(Technical University of Malaysia, Malacca; மலாய்: Universiti Teknikal Malaysia Melaka) (UTeM) என்பது மலேசியா, மலாக்கா, ஆங் துவா ஜெயா, டுரியான் துங்கல் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும்.[6][7]
776 ஏக்கர் பர்ப்பளவைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், தொடக்கத்தில் மலேசிய தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி (ஆங்கிலம்:(National Technical University College of Malaysia; மலாய்: Kolej Universiti Teknikal Kebangsaan Malaysia) (KUTKM) எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் அதன் பெயர் மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆங்கிலம்: (Technical University of Malaysia, Malacca) என மாற்றப்பட்டது.[8][9]
Remove ads
பொது
இந்தப் பல்கலைக்கழகம் மலேசியாவின் முதல் தொழில்நுட்ப பொது பல்கலைக்கழகம்; மற்றும் 14-ஆவது பொது பல்கலைக்கழகம் ஆகும். 2007-ஆம் ஆண்டில், முழு பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டது. மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பில் (Malaysian Technical University Network) (MTUN) ஓர் உறுப்பினராகவும் உள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் 1971 (சட்டம் 30), பிரிவு 20-இன் கீழ், தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவில் உயர்நிலைத் தொழில்நுட்பக் கல்விக்கான "நடைமுறை மற்றும் பயன்பாடு சார்ந்த" கற்பித்தல் மற்றும் கற்றல் முறையைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறது.
Remove ads
பல்கலைக்கழக வளாகம்
இரண்டு முதன்மை வளாகங்களில் எட்டு துறைகளில் கற்பிக்கப்படுகின்றன.
- தலைமை வளாகம், டுரியான் துங்கல்
- தொழில்நுட்ப பயிற்சி வளாகம் ஆயர் குரோ
புள்ளி விவரங்கள்
சான்று:[10]
மாணவர் எண்ணிக்கை
31 சூலை 2019 புள்ளி விவரங்கள்:
- 10,930 மாணவர்கள்
- 24 எந்திரவியல் பட்டயப் படிப்பு
- 688 முனைவர்- 403 பன்னாட்டு மாணவர்கள்
- 664 முதுகலை - 113 பன்னாட்டு மாணவர்கள்
- 8,383 இளங்கலை - 161 பன்னாட்டு மாணவர்கள்
- 1,171 பட்டயப் படிப்பு
- 26,418 பட்டதாரிகள் 2005 வரையில்
கல்வித் திட்டங்கள்
செப்டம்பர் 2019 நிலவரப்படி, 86 கல்வித் திட்டங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன:
- 13 முனைவர் திட்டங்கள்
- 37 முதுநிலைத் திட்டங்கள்
- 29 இளங்கலைத் திட்டங்கள்
- 5 பட்டயத் திட்டங்கள்
- 2 புதிய இளங்கலைத் தொழில்நுட்பம்; செப்டம்பர் 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
- மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் (UTHM)
- மலேசிய பகாங் பல்கலைக்கழகம் (UMP)
- மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகம் (UniMAP)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads