மலேசிய பங்குச் சந்தை

பர்சா மலேசியா From Wikipedia, the free encyclopedia

மலேசிய பங்குச் சந்தை
Remove ads

மலேசிய பங்குச் சந்தை அல்லது பர்சா மலேசியா (MYX: 1818) ஆங்கிலம்: Bursa Malaysia; முன்னர் Kuala Lumpur Stock Exchange (KLSE); மலாய்: Bursa Malaysia முன்னர் Bursa Saham Kuala Lumpur என்பது மலேசியாவின் பங்குச்சந்தை ஆகும்.

விரைவான உண்மைகள் வகை, இடம் ...

இந்தப் பங்குச் சந்தை ஆசியானின் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாகும்.[2] இது கோலாலம்பூரில் அமைந்துள்ளது; மற்றும் முன்பு கோலாலம்பூர் பங்குச் சந்தை (KLSE) என அறியப்பட்டது. இது பரிவர்த்தனைகளின் முழு ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது.

பரந்த அளவிலான நாணய பரிமாற்றம் மற்றும் வணிகம், நாணயத் தீர்வு, நாணயச் சேமிப்புச் சேவைகள் உட்பட பற்பல நாணயச் சேவைகளை வழங்குகிறது.[3] மலேசிய பிணையங்கள் ஆணையத்துடன் இணைந்து, மலேசிய பங்குச் சந்தையையும்; மலேசிய மூலதனச் சந்தையையும் ஒழுங்குபடுத்துகிறது.[4]

Remove ads

வரலாறு

சிங்கப்பூர் பங்குத் தரகர்கள் சங்கம் (Singapore Stockbrokers Association); மலாயாவின் பத்திரங்களின் அதிகாரப்பூர்வ அமைப்பாக மாறியதும் பர்சா மலேசியா 1930-இல் நிறுவப்பட்டது. 1937 இல், இது மலாயாவின் பங்குத் தரகர்கள் சங்கமாக (Stockbrokers' Association of Malaya) மீண்டும் பதிவு செய்யப்பட்டது.

1960-இல், மலாயன் பங்குச் சந்தை (Malayan Stock Exchange) உருவாக்கப்பட்டது மற்றும் பொது வணிகச் சேவை அதே ஆண்டு மே 9 அன்று தொடங்கியது. 1961 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர்; ஆகிய நகரங்களில், இரண்டு பங்குச் சந்தை வணிக மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மலேசிய சிங்கப்பூர் பங்குச் சந்தை

இரண்டு வணிக மையங்களும் நேரடி தொலைபேசி இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டன. மலேசிய பங்குச் சந்தை முறைப்படி 1964-இல் உருவாக்கப்பட்டது.

1962-ஆம் ஆண்டில், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிக்கப்பட்டவுடன், பங்குச் சந்தையானது மலேசிய சிங்கப்பூர் பங்குச் சந்தையின் (Malaysian and Singapore Stock Exchange) (MSSE) கீழ் தொடர்ந்து செயல்பட்டது.

சிங்கப்பூர் பங்குச் சந்தை

1973-இல், மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே நாணயப் பரிமாற்றம் நிறுத்தப்பட்டது. அத்துடன், மலேசிய சிங்கப்பூர் பங்குச் சந்தை என்பது கோலாலம்பூர் பங்குச் சந்தை (Kuala Lumpur Stock Exchange Bhd) (KLSEB) மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தை (Stock Exchange of Singapore) (SES) என பிரிக்கப்பட்டது. மலேசிய நிறுவனங்கள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் தொடர்ந்து பட்டியலிடப்பட்டன.

சிறிது காலத்திற்குப் பின்னர், மலேசிய நிறுவனங்களின் பொறுப்புகளை கோலாலம்பூர் பங்குச் சந்தை ஏற்றுக் கொண்டது. 1994-இல், கோலாலம்பூர் பங்குச் சந்தை என முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2004-இல், பர்சா மலேசியா என மறுபெயரிடப்பட்டது.

7 மே 2024 அன்று, பர்சா மலேசியா முதல் முறையாக பங்குச் சந்தை மூலதனத்தில் RM 2 ரிங்கிட் டிரில்லியனை எட்டியது.[5][6]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads