மல்லை சத்யா
தமிழ்நாட்டு அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மல்லை சி. ஏ. சத்யா (Mallai C.E Sathya, பிறப்பு: டிசம்பர் 11, 1963) தமிழ் நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆவார். 10.12.1963-இல், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த குரும்பிறை என்கிற சிற்றூரில் சி. ஏகாம்பரம், நாகம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் போட்டியிட்டுத் தலைவராக வெற்றி பெற்றார்[2]. 2011 ஆம் ஆண்டு மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாமல்லை பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவி துர்காசினியை வெற்றி பெறவைத்தார்.[3]
Remove ads
தமிழ்ப் பணி
இவர் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.[7]
எழுதிய நூல்கள்
- தீண்டாத காதல்
- தமிழர்களின் அறச்சீற்றம்
- மணிமகுடமா முள்கிரீடமா?
- தென் ஆப்ரிக்காவில் திருவள்ளுவர்
- மலேசியா நினைவலைகள்
- வியட்நாம் புரட்சி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads