மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் (Massachusetts Bay Colony, 1628-1691) வட அமெரிக்காவின் கிழக்குக் கடலோரமாக 17ஆம் நூற்றாண்டில், மாசச்சூசெட்சு விரிகுடாவை அடுத்த பகுதிகளில் உருவான முதல் ஆங்கிலக் குடியேற்றமாகும். இதற்குப் பின்னால் இதன் தென்பகுதியில் உருவான பல குடியேற்றங்களும் சீரமைக்கப்பட்டு 1629இல் மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம் அறிவிக்கப்பட்டது. தற்போதைய மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் நியூ இங்கிலாந்தின் மையப்பகுதியில் இந்த குடியேற்ற நிலங்கள் அமைந்திருந்தன. 15.2 மைல்கள் (24.5 km) தொலைவில் இருந்த இரு இயற்கைத் துறைமுகங்களையும் அடுத்துள்ள பகுதிகளிலும் துவக்க கால குடியேற்றங்கள் அமைந்திருந்தன.[1] இவை தற்கால நகரங்களான சேலம், பாஸ்டனை சுற்றியிருந்தன.
இந்தக் குடியேற்றம் நிர்வகித்த பகுதி தற்கால மைய நியூ இங்கிலாந்தையும் மாசச்சூசெட்ஸ், மேய்ன், நியூ ஹாம்சயர், றோட் தீவு, கனெடிகட்மாநிலப் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது. மேற்கில் அமைதிப் பெருங்கடல் வரையிலான நிலப்பகுதிகளை நிர்வகிக்காத போதும் இந்தக் குடியேற்றம் அவற்றிற்கு உரிமை கோரியது. இதனை முந்தைய டச்சுக் குடியேற்றமான நியூ நெதர்லாந்து எதிர்த்தது.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads