மாஜு விரைவுச்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாஜு விரைவுச்சாலை அல்லது கோலாலம்பூர்-புத்ராஜெயா விரைவுச்சாலை (ஆங்கிலம்; Maju Expressway (MEX) அல்லது Kuala Lumpur–Putrajaya Expressway (KLPE) & KL–KLIA Dedicated Expressway;
மலாய்: Lebuhraya Kuala Lumpur-Putrajaya) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு விரைவுச் சாலை வலையமைப்பாகும்.
26 கிமீ (16 மைல்) நீளமுள்ள இந்த விரைவுச்சாலை, கோலாலம்பூர் மாநகர மையத்தை, சிலாங்கூர், செப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் (KLIA) இணைக்கிறது. இந்த விரைவுச்சாலை, மலேசிய பல்லூடகப் பெருவழியின் (MSC) முதுகெலும்பாகும்.[1]
இந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0, கோலாலம்பூர் கம்போங் பாண்டான் பரிமாற்றச் சாலையில் (Kampung Pandan Interchange), துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு பரிமாற்றச் சாலைக்கு (Tun Razak Exchange) வெளியே அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
மாஜு விரைவுச்சாலையின் கட்டுமானம் திசம்பர் 6, 2004-இல் தொடங்கி; திசம்பர் 5, 2007-இல் நிறைவடைந்து; திசம்பர் 13, 2007-இல் வாகனப் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது. இந்த விரைவுச்சாலை மலேசியத் தலைநகரான கோலாலம்பூருக்கும், மலேசிய அரசாங்கத்தின் புதிய நிர்வாக மையமான புத்ராஜெயாவிற்கும் இணைப்பை வழங்குகிறது.
மேலும் மலேசிய பல்லூடகப் பெருவழி (MSC); மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் மையமான சைபர்ஜெயாவிற்கும் இடையே துரிதமான போக்குவரத்து இணைப்பையும் வழங்கி வருகிறது.[1]
இரட்டை வழித்தடங்களைக் கொண்ட மாஜு விரைவுச்சாலையை; மாஜு எக்ஸ்பிரசுவே (Maju Expressway Sdn Bhd) (MESB) நிறுவனம் இயக்குகிறது. அந்த நிறுவனம் அரசாங்கத்திடம் இருந்து 33 ஆண்டு காலச் சலுகையைப் பெற்றுள்ளது.[1]
Remove ads
இணைப்பு
புத்ராஜெயா, சைபர்ஜெயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் கோலாலம்பூர் குறைந்த விலை வானூர்தி முனையம் (Low-Cost Carrier Terminal) (LCCT)[2] ஆகியவற்றை கோலாலம்பூருடன் இணைக்கும் நெறிமுறை விரைவுச்சாலை என மாஜு விரைவுச்சாலை (MEX) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாஜு விரைவுச்சாலை, புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை 60 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாக அல்லது முந்தைய பயண நேரத்தில் பாதியாகக் குறைக்கிறது. அதே வேளையில் கம்போங் பாண்டான், சாலாக் செலாத்தான், கூச்சாய் லாமா, புக்கிட் ஜாலில் மற்றும் புத்ராஜெயா உத்தாமா ஆகிய இடங்களில் மாற்றுச் சாலைகளையும் கொண்டுள்ளது.[1]
Remove ads
கூறுகள்
- இந்த விரைவுச் சாலை, வாகனக் கண்டுபிடிப்பான்கள் மற்றும் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) கருவிகளை உள்ளடக்கிய போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமைப்பை (Traffic Control and Surveillance System) வழங்குகிறது.
- அவசர தொலைபேசிகள் மற்றும் மாறும் தகவமைப்பு பலகைகள் (Variable Message Signs)
- விரைவுச் சாலையில் உதவி தேவைப்படும் ஓட்டுநர்களுக்கு உதவிகள் செய்ய மாஜு விரைவுச்சாலை ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
- ஓட்டுநர் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக முழு விரைவுச் சாலையும் இரவில் முழுமையாக ஒளிரும்.
- 90 கிமீ/மணி வேக வரம்பு[3]
- விரைவுச்சாலைகளில் பல மேம்பாலங்கள்
- புக்கிட் ஜாலில் மற்றும் செரி கெம்பாங்கான் இடையே நீண்ட நேரான பிரிவுகள்
- சாலாக் செலாத்தான் பகுதியில் இருந்து கோலாலம்பூர் வானலைக் காட்சிகள்
சுங்கக் கட்டணங்கள்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
