கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை (மலாய்; Lebuhraya Kuala Lumpur-Seremban; ஆங்கிலம்: Kuala Lumpur–Seremban Expressway சீனம்: 隆芙大道) என்பது தீபகற்ப மலேசியா, கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய விரைவுச் சாலையாகும்.

விரைவான உண்மைகள் Expressway 37, வழித்தடத் தகவல்கள் ...

8.1 கிமீ (5.0 மைல்) நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை, வடக்கே கோலாலம்பூர் மாநகரையும்; தெற்கில் நெகிரி செம்பிலான், சிரம்பான் நகரையும் இணைக்கிறது. சில வரைபடங்கள் இந்த நெடுஞ்சாலையை E2  என்று பெயரிடுகின்றன. ஏனெனில் இந்தச் சாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு வழித்தடத்துடன் நேரடியாக இணைப்பதால் அவ்வாறு கருதப்படுகிறது.

இருப்பினும் அவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் சரியானதல்ல; ஏனெனில் இந்த கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை, பிளஸ் விரைவுச்சாலைகள் அமைப்பினால் நிர்வகிக்கப்படவில்லை. மாறாக மெட்ராமேக் கார்ப்பரேசன் (Metramac Corporation) என்று முன்பு அழைக்கப்பட்ட அனி நிறுவனத்தால் (ANIH Berhad) நிர்வகிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச் சாலையின் செலவுகளை ஈடுகட்ட, சுங்கை பீசி சுங்கக் கட்டணச் சாவடியில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கட்டணம் 2018-ஆம் ஆண்டு நீக்கல் செய்யப்பட்டது. 2007-ஆம் ஆண்டில், சாலாக் விரைவுச்சாலையுடன் கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச் சாலை இணைக்கப்பட்டது; பின்னர் E37  எனும் சொந்த வழித்தட எண் வழங்கப்பட்டது.

Remove ads

வழிப் பின்னணி

இந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0; ரசாக் மேன்சன் மாற்றுச் சாலையில் (Razak Mansion Interchange) தொடங்குகிறது. அதே வேளையில் அதன் தெற்கு முனையம்; மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம் E2  -இல் சுங்கை பீசி சுங்கக் கட்டணச் சாவடிக்கு முன்னால் உள்ளது. அதன் இறுதி கிலோமீட்டர் (KM8.1) என்பது E2  மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்தின் கிலோமீட்டர் 310.8-இல் முடிவடைகிறது.[1]

Remove ads

வரலாறு

கோலாலம்பூரிலிருந்து சிரம்பான் வரையிலான 63.4 கிமீ (39.3 மைல்) கட்டுப்படுத்தப்பட்ட இந்த அணுகல் விரைவுச் சாலையின் கட்டுமானம் மலேசிய இரண்டாவது திட்டத்தின் (ஆங்கிலம்: Second Malaysia Plan; மலாய்: Rancangan Malaysia Kedua) (RMK-2) ஒரு பகுதியாக 1974 மார்ச் 27-இல் தொடங்கியது; மொத்த செலவு RM 32.9 மில்லியன் ஆகும்.[2]

இந்த விரைவுச் சாலை 14 பரிமாற்றச் சாலைகள், 2 சாலையோர ஊர்தி நிறுத்தும் இடங்கள்; மற்றும் 6 சுங்கச்சாவடிகள் (சுங்கை பீசி, மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், காஜாங், பாங்கி, நீலாய், சிரம்பான்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மூன்று கட்டங்களாகக் கட்டப்பட்ட இந்த விரைவுச் சாலைக்கு உலக வங்கிக் கடன் வழியாக நிதியளிக்கப்பட்டது. முதல் கட்டம்: கோலாலம்பூரிலிருந்து நீலாய் வரை: இரண்டாவது கட்டம்: நீலாய் முதல் சிரம்பான் வரை;[2] மூன்றாவது கட்டம்: வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லா சேவைக்காக கோலாலம்பூரிலிருந்து சிரம்பான் வரையிலான பழைய 1 மலேசிய கூட்டரசு சாலை 1-ஐ மறுசீரமைப்பு ஆகும்.[2]

Remove ads

சுங்கக் கட்டணங்கள்

சுங்கை பீசி சுங்கக் கட்டணச் சாவடியில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது சூன் 1, 2018-இல் நிறுத்தப்பட்டது. மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை மற்றும் சாலாக் விரைவுச்சாலைக்கான சுங்கச் சலுகைகள் நடைமுறைக்கு வந்தன.[3]

மேலதிகத் தகவல்கள் பிரிவு, வாகனங்களின் வகை ...
குறிப்பு:   Touch 'n Go   தொட்டு செல் அட்டைகள், விசா/மாஸ்டர்கார்டு வங்கி அட்டைகள், SmartTAG இஸ்மார்ட் அட்டைகள் (SmartTAG) அல்லது MyRFID வானலை அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் சுங்கக் கட்டணங்களைச் செலுத்தலாம். தற்காலிகமாக ரொக்கப் பணம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

காட்சியகம்

கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை காட்சிப் படங்கள் (2007-2008)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads