கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை
மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையில் நீட்டிக்கப்பட்ட ஒரு விரைவுச்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை அல்லது சாலாக் விரைவுச்சாலை (ஆங்கிலம்; East–West Link Expressway அல்லது Salak Expressway; மலாய்: Lebuhraya Hubungan Timur–Barat) என்பது செபுத்தே புறநகர்ப் பகுதியில் இருந்து செராஸ், தாமான் கோனாட் வரையிலான மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையில் நீட்டிக்கப்பட்ட ஒரு விரைவுச்சாலை ஆகும்.[1]
பேராக், கிரிக் நகரில் இருந்து கிளாந்தான் ஜெலி வரை செல்லும்
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை 4 (East–West Highway/Gerik–Jeli Highway) வழித்தடத்திற்கும் கிழக்கு–மேற்கு எனும் அடைமொழிச் சொற்கள் உள்ளன. இருப்பினும் இந்த கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை என்பது கோலாலம்பூர் தென்கிழக்கு பரவல் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.[1]
இந்த நெடுஞ்சாலையை
என்று சில வரைபடங்கள் பெயரிடுகின்றன. ஏனெனில் இந்தச் சாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு வழித்தடத்துடன் நேரடியாக இணைவதால் அவ்வாறு கருதப்படுகிறது. இருப்பினும் அவ்வாறு குறிப்பிடுவது சரியானது அல்ல; ஏனெனில் இந்த கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை, பிளஸ் விரைவுச்சாலைகள் அமைப்பினால் நிர்வகிக்கப்படவில்லை. மாறாக மெட்ராமேக் கார்ப்பரேசன் (Metramac Corporation) என்று முன்பு அழைக்கப்பட்ட அனி நிறுவனத்தால் (ANIH Berhad) நிர்வகிக்கப்படுகிறது.
2007-ஆம் ஆண்டில், சாலாக் விரைவுச்சாலையுடன் கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச் சாலை இணைக்கப்பட்டது; பின்னர்
எனும் சொந்த வழித்தட எண் வழங்கப்பட்டது. இந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0; செபுத்தே மாற்றுச் சாலையில் (Seputeh Interchange) தொடங்குகிறது.
Remove ads
வரலாறு
கிழக்கு-மேற்கு இணைப்பு விரைவுச்சாலையின் கட்டுமானப் பணிகள் 1993-இல் தொடங்கி 1995-இல் நிறைவடைந்தன; 17 ஆகத்து 1995 அன்று திறக்கப்பட்டது. மே 17, 2011-இல், சாலாக் மாற்றுச் சாலையில் (Salak Interchange) இருந்து தாமான் கோனாட் மாற்றுச் சாலை (Taman Connaught Interchange) வரையிலான சுங்கக் கட்டண சேகரிப்பு நீக்கல் செய்யப்பட்டது.[2]
கூறுகள்
தாமான் கோனாட் பசார் மாலாம் எனும் இரவு சந்தை (Taman Connaught Pasar Malam) ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 5:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை தாமான் கோனாட் குடியிருப்புப் பகுதியில் நடைபெறும். அந்தக் கட்டத்தில் கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துப் படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிறது.
சுங்கக் கட்டணங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads