மாடக்குளம்

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாடக்குளம் (ஆங்கிலம்: Madakulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5][6][7]

விரைவான உண்மைகள் மாடக்குளம்Madakulam மாடக்குளம், நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 163 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாடக்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9.916055°N 78.090035°E / 9.916055; 78.090035 ஆகும். மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை மாடக்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

மதுரை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் 167 மில்லியன் கன அடி நீரைத் தேக்கும் அளவில் 365 ஏக்கர் பரப்பளவில், மாடக்குளம் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது.[8][9][10][11]

மதுரையில் மாடக்குளம் மற்றும் டி. வி. எஸ். நகரை இணைக்கும் சாலை மேம்பாலம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் இரண்டாவது பகுதி, ரூ.16.62 கோடி மதிப்பீட்டில் ஜெய்ஹிந்த்புரம் நோக்கி 251 மீட்டர் நீளமுள்ளதாகக் கட்டப்பட்டு வருகிறது.[12]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads