மாணிக்கவாசகம் சுந்தரம்

மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாணிக்கவாசகம் சுந்தரம் அல்லது சு. மாணிக்கவாசகம் (ஆங்கிலம்: Manikavasagam s/o Sundram அல்லது S. Manikavasagam; மலாய்: Manikavasagam Sundram; சீனம்: 马尼卡瓦萨甘圣日) (பிறப்பு: 27 சூன் 1965) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; ஒரு சமூகச் செயற்பாட்டாளர்; 2008 முதல் 2013 வரை மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் மக்களவை தொகுதியின் (Kapar Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1])

விரைவான உண்மைகள் மாண்புமிகுமாணிக்கவாசகம் சுந்தரம் Yang Berhormat Manikavasagam Sundramமலேசிய நாடாளுமன்ற உறுப்பினர், சிலாங்கூர் காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

2008-ஆம் ஆண்டு, பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) (பிகேஆர்) உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்பு இந்தத் தொகுதி பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் கீழ் இருந்தது.[2]

மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப் படுவதற்கு முன்பு, இவர் இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force) அல்லது இண்ட்ராப் (HINDRAF) அமைப்பின் முக்கியத் தலைவராக இருந்தார்.[3][4]

Remove ads

பொது

தலைமைப் பதவி துறப்பு

2008 டிசம்பர் மாதம், பி.கே.ஆர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தின் பி.கே.ஆர் கட்சியின் தலைமையின் மீதான ஏமாற்றத்தைக் காரணம் காட்டினார். எனினும் இறுதியில் பி.கே.ஆர் கட்சியில் அவர் வகித்த தலைமைப் பதவியை மட்டும் துறப்பு செய்தார். ஆனால் கட்சியில் இருந்து விலகவில்லை.[5][6]

நீதிமன்ற கைது ஆணை

ஜூன் 2009 இல், மலேசிய தமிழ்த் திரைப்பட நடிகையின் மரணம் தொடர்பான விசாரணையில்; சாட்சியம் அளிப்பதற்கான நீதிமன்ற ஆணைக்கு பதிலளிக்க மாணிக்கவாசகம் சுந்தரம் மறுத்தார். அதனால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.[7][8]

இருப்பினும் அவர் இறுதியில் விசாரணையில் சாட்சியம் அளித்தார். அதன் பின்னர் இரண்டு வாரங்களில், அவர் ஒரு பொது ஆர்ப்பாட்டத்தின் போது, வேறு ஒரு காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.[9][10]

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தோல்வி

2013 மலேசியப் பொதுத் தேர்தலில் அவர் காப்பார் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு பி.கே.ஆர் கட்சியின் தலைமைத்துவம் அனுமதிக்கவில்லை.

மாறாக அவர் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் புக்கிட் மெலாவத்தி மாநிலத் தொகுதியில் (Bukit Melawati State Constituency) போட்டியிட்டார். இருப்பினும் அம்னோ (UMNO) வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

பிகேஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம்

2014-இல் சிலாங்கூர் மாநில முதல்வர் காலிட் இப்ராகிமுக்கு (Selangor Chief Minister Khalid Ibrahim) எதிராக "பண அரசியல்" குற்றச்சாட்டுகளை மாணிக்கவாசகம் சுந்தரம் முன்வைத்தார். அதற்காக அவர் பிகேஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரின் இடைநீக்கம் நீக்கப்பட்டது. அதன் பிறகு, பிகேஆர் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு சிலாங்கூர் முதலமைச்சர் காலிட் இப்ராகிமுக்கு சவால் விடுத்தார்.[11][12]

சிலாங்கூர் முதலமைச்சருக்கு சவால்

இருப்பினும் மாணிக்கவாசகம் சுந்தரம் சிலாங்கூர் மாநிலத்தின் பிகேஆர் தலைமை பதவிக்கு (Selangor Division PKR Chief Post) போட்டியிட்டு வென்றார். இந்த நிகழ்வுகளின் பின்னணியில், 2014-ஆம் ஆண்டில் காலிட் இப்ராகிம் தன் முதலமைச்சர் பதவியையும் இழக்க வேண்டி வந்தது.[13]

7 ஏப்ரல் 2018-இல், அவர் மலேசிய மக்கள் கட்சியில் (Malaysian People's Party) மீண்டும் இணைவதாக அறிவித்தார். 2018 மலேசிய பொதுத் தேர்தலில்; காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கும் (Kapar Parliamentary Seat); சிலாங்கூர் மாநில மேரு தொகுதிக்கும் (Meru State Seat); மலேசிய மக்கள் கட்சியின் கீழ் போட்டியிட்டார். ஆனால் இரண்டிலும் தோல்வி அடைந்தார்.[14][15]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads