மாதவரம் நெடுஞ்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதவரம் நெடுஞ்சாலை[1] என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப் பகுதியில் எப்போதும் கூட்டமாகக் காணப்படும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். சென்னை மாநகரின் முக்கியமான வியாபார மையங்களில் இச்சாலைப் பகுதியும் ஒன்றாகும். இச்சாலையில், முக்கியமான தொழிற்சாலைகள் நிறைந்த 'அமால்கமேசன் குழும' தொழிற்தோட்டம் (உதாரணமாக, சார்ட்லோ இந்தியா லிமிடெட்), ஜவுளி வியாபார நிறுவனங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள், உணவுக் கூடங்கள், மின்னணு உபகரண கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், திரையரங்க வளாகம், 'இண்டேன்' வாயு முகமை, செல்பேசி சேவை மையங்கள், தங்க நகைக் கடைகள், பூ வியாபாரிகள், பழ விற்பனையாளர்கள், தேநீர் விடுதிகள், வங்கிகள், இருசக்கர வாகன விற்பனையகம் ஆகிய தொழில் சார்ந்தோர் உண்டு.
பெரம்பூர், வியாசர்பாடி, திரு. வி. க. நகர், செம்பியம், அகரம், ஜவஹர் நகர், பெரவள்ளூர், பெரியார் நகர், கொளத்தூர், மூலக்கடை, மாதவரம், மாத்தூர், மணலி, எர்ணாவூர், எண்ணூர், மீஞ்சூர், பாரிமுனை போன்ற முக்கியமான புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் தனிநபர் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இச்சாலை வழியாக அதிகளவில் பயணிக்கின்றன.
Remove ads
மெட்ரோ இரயில் திட்டம்
சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட மூன்றாவது வழித்தடத்தில் மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ இரயில் நிறுத்தமும் ஒன்று.[2] இதற்கான சுரங்கம் தோண்டும் பணிகளுக்காக, எந்திரங்கள் மாதவரம் நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளன.[3][4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads