மாராங்

From Wikipedia, the free encyclopedia

மாராங்map
Remove ads

மாராங்; (ஆங்கிலம்: Marang; மலாய்: Marang) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், மாராங் மாவட்டத்தில் (Marang District) உள்ள ஒரு நகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.

விரைவான உண்மைகள் மாராங், நாடு ...

இந்த நகரம் தென் சீனக் கடற்கரையில் (South China Sea), கோலா திராங்கானு நகருக்கும் பகாங், குவாந்தான் (Kuantan) நகருக்கும் இடையிலான கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் (East Coast Expressway) அருகில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலாத் துறை ஆகும்.

Remove ads

பொது

கபாசு தீவு (Kapas Island), பீடோங் தீவு (Bidong Island), லாங் தெங்கா (Lang Tengah Island), வான் மேன் (Wan Man Island), ரெடாங் தீவு (Redang Island) ஆகிய தீவுகளுக்கு செல்ல ஒரு படகுதுறை இடமாக மாராங் நகரம் விளங்குகிறது. கபாசு தீவு ஓர் அழகான தீவு. உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் தீவாகவும் திகழ்கிறது.

மாராங் நகருக்கு கிழக்கே 6 கி.மீ. (3.7 மைல்) தொலைவில் கபாசு தீவு அமைந்துள்ளது. புலாவ் இயெமியா (Pulau Gemia) என்ற ஒரு சிறிய தீவு இதன் வடக்கில் அமைந்துள்ளது.[2]

Remove ads

சொல் பிறப்பியல்

மாராங் மாவட்டத்தின் பெயர்த் தோற்றம், இந்தப் பகுதியில் முதலில் குடியேறியவர்களில் ஒருவரான மா (Ma) என்ற ஒருவரின் பெயரில் இருந்து மட்டுமே அறியப்படுகிறது. உலர்ந்த கடல் பொருட்களின் சீன தொழில்முனைவோராக இருந்தார் என்றும்; ராங் (rang) எனும் அடுக்குத் தட்டுகளைப் பயன்படுத்தி கடல் பொருட்களை உலர வைத்தார் என்றும் காரணம் சொல்லப்படுகிறது.

மாராங்கில் இருந்த அனைத்து அடுக்குத் தட்டுகளுக்கும் அந்த சீன வணிகர் சொந்தக்காரராக இருந்ததால் அந்த இடத்திற்கு மாராங் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Remove ads

கபாசு தீவு

உலகின் அழகான தீவுகளில் கபாசு தீவும் ஒரு தீவாக அறியப்படுகிறது. பச்சை வெப்பமண்டல காடுகள், தெளிவான கடல் நீர், வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் சுற்றியுள்ள நீரில் பவளப் பாறைகள் போன்றவை கபாசு தீவின் ஈர்ப்பு அம்சங்களாகும். சிலவகையான கடல்நீர் விளையாட்டுகளுக்கு இந்தத் தீவு ஒரு சொர்க்கம் என்றும் அறியப்படுகிறது. மாராங் நகரத்தில் இருந்து படகு மூலம் இந்தத் தீவை அடையலாம்.[2]

கபாஆம்பிட்ரோமசு நத்தைகள் (Amphidromus Snails) பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் இடமாகவும் இந்தத் தீவு விளங்குகிறது. மற்ற அனைத்து நத்தைகளைப் போல் அல்லாமல், ஆம்பிட்ரோமசு அல்லது ஆம்பிட்ரோமைன் நத்தைகளின் (Amphidromine Snails) அமைப்பு பொதுவாக கடிகார திசையிலும் எதிர் எதிர்த் திசையிலும் அமைந்ததாக இருக்கும்.[3]

காலநிலை

மாராங் ஒரு வெப்பமண்டல மழைக்காடு காலநிலையையும்; ஆண்டு முழுவதும் கனமான மழை பொய்வையும் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், மாராங், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads