மார்வெலின் நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்வெலின் நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடர்கள் (ஆங்கிலம்: Marvel's Netflix television series) என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றிய கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்பட்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமெரிக்க நாட்டு தொலைக்காட்சித் தொடர்களின் தொகுப்பாகும். இந்த தொடர்கள் ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் மார்வெல் தொலைக்காட்சி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது, அவை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில்[2][3] அமைக்கப்பட்டு, உரிமையாளரின் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களின் தொடர்ச்சியை அங்கீகரிக்கின்றன. இந்த மார்வெல் நெற்ஃபிளிக்சு தொடர்களின் குழுவை "மார்வெல் ஸ்ட்ரீட்-லெவல் கிரோஸ்" அல்லது "மார்வெல் நைட்ஸ்" என்று அழைக்கப்படுகின்றது.
2013 இல் மார்வெல் மற்றும் நெற்ஃபிளிக்சு இடையிலான ஒப்பந்தம் நவம்பரில் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து டேர்டெவில் (2015–2018),[4][5] ஜெசிகா ஜோன்சு (2015–2019),[6] லூக் கேஜ் (2016–2018)[7] மற்றும் அயன் பிஸ்ட் (2017–2018),[8][9] ஆகிய தனித் தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. அத்துடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தி டிபென்டெர்சு (2017)[10][11] என்ற தொடரும்,டேர்டெவிலில் இருந்து ஒரு வழித்தொடரான[12] தி பனிஷர் (2017–2019)[13] என்ற தொடரும் உருவானது. இந்தத் தொடர்கள் அனைத்தும் நியூயார்க் மாநிலத்தில் படமாக்கப்பட்டன.
இந்தத் தொடரில் மாட் மர்டாக் மற்றும் டேர்டெவிலாக சார்லி சாக்ஸ்,[14] ஜெசிகா ஜோன்சுவாக கிரிஸ்டன் ரிட்டர்,[15] லூக் கேஜாக மைக் கால்டர்,[16] மற்றும் டேனி ராண்ட் மற்றும் அயர்ன் பிஸ்ட் ஆக பின் ஜோன்சு ஆகியோர் நடித்துள்ளனர், இவர்கள் அனைவரும் தி டிபென்டெர்சு ஒன்றாக நடித்துள்ளனர், மேலும் ஜோன் பெர்ந்தல் என்பவர் பனிஷர் மற்றும் பிராங்காக நடித்துள்ள்ளார். அத்துடன் மார்வெலுடன் ஒரு சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொசாரியோ டாசன் உட்பட பல நடிகர்கள் பல்வேறு தொடர்களில் நடித்துள்ளனர்.
மார்வெலின் தாய் நிறுவனமான டிஸ்னி[17] தனது சொந்த ஓடிடி தள சேவையான டிஸ்னி+ க்காக பல தொடர்கள் தயாரித்து வருவதால்,நெற்ஃபிளிக்சு இல் இருந்து அனைத்து தொடர்களையும் பிப்ரவரி 2019க்குள் ரத்து செய்யப்பட்டது. ஒப்பந்தப்படி நெற்ஃபிளிக்சில் ஒளிபரப்பான மார்வெல் தொடர்களின் கதாபாத்திரங்களை பயன்படுத்துவதற்கு மார்வெல் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
வளர்ச்சி
அக்டோபர் 2013 வாக்கில், மார்வெல் நிறுவனம் நெற்ஃபிளிக்சு மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடித் தளத்திற்கு தொடர்களை தயாரிக்க தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நான்கு[18] நாடகத் தொடர்களும் மற்றும் குறும் தொடர்களும் கோரிய நேரத்து ஒளித சேவைகள் கீழ் தயாரிக்க முன் வந்தது. அதை தொடர்ந்து டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, அயன் பிஸ்ட் மற்றும் லூக் கேஜ் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி தொடர்களை நெற்ஃபிளிக்சு வழங்குவதாக டிஸ்னி அடுத்த மாதம் அறிவித்தது.
Remove ads
தொடர்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads