மின்சிட்டுகள்

From Wikipedia, the free encyclopedia

மின்சிட்டுகள்
Remove ads

மின்சிட்டுகள் (Minivet) சற்றே சிறிய பறவைகள். இவ்வகைப் பறவைகள் நீண்ட உடலையும் குட்டையான கால்களையும் உடையவை. மின் சிட்டுகள், முற்றிலும் மரங்களுக்குள்ளாகவே தங்களது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளும் வகையைச் சேர்ந்தவைகள். இரையைப் பிடிப்பதென்றாலும், பறந்து பறந்து தான் பிடிக்கும். வெகு அரிதாகவே தரைக்கு வரும். மேலும், மிக உயர்ந்த இடங்களிலேயே கூடுகட்டும். மின்சிட்டுகள் வலசை போகாது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே சுற்றிக்கொண்டிருக்கும். மரங்கள் அடர்ந்த காடுகளில் அதிகளவில் காணப்படும். பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும்.[1]

விரைவான உண்மைகள் மின்சிட்டுகள், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

சிற்றினங்கள்

மின்சிட்டுகள் பேரினத்தின் கீழ் 15 சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.[2]

Remove ads

ஆரஞ்சு மின்சிட்டு

Thumb
ஆரஞ்சு மின்சிட்டு

ஆரஞ்சு மின்சிட்டு நீண்ட நாட்களாக குங்குமப் பூச்சிட்டு சிற்றினத்தைச் சேர்ந்ததொரு பறவையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, தென்கிழக்கு இந்தியா-இலங்கைப் பகுதியைச் சேர்ந்த இவ்வகைப் பறவைகள் குங்குமப் பூச்சிட்டிலிருந்து சற்று மாறுபட்டிருப்பதைக் கண்டு, தனிச் சிற்றினமாக பட்டியலிடப்பட்டுள்ளது. மற்ற மின்சிட்டுகளைக் காட்டிலும் சற்று பெரிய பறவை இது. நிறக் கலவையில், ஆண் பெண் இரண்டும் உச்சந்தலையின் சாம்பல் நிறமும், ஆண் இறக்கையில் சிகப்பு புள்ளிகளையும் கொண்டிருக்கும். நீண்ட வால்களை உடையது.

Remove ads

சிறிய மின்சிட்டு

எல்லா மின்சிட்டுகளையும் விட அளவில் சிறியவை. ஆண், மற்ற மின்சிட்டுகள் போல அடர்கருப்பு நிற கழுத்து மற்றும் முதுகுப்பகுதியைக் கொண்டிருக்காது. மாறாக அடர்சாம்பல் நிறத்திலிருக்கும். வயிற்றுப்பகுதி வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பெண், வயிற்றுப் பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆரஞ்சு மின்சிட்டுகள் போலவே இதற்கும் நீண்ட வால் உண்டு.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads