சாம்பல் மின்சிட்டு

From Wikipedia, the free encyclopedia

சாம்பல் மின்சிட்டு
Remove ads

சாம்பல் மின்சிட்டு (ashy minivet)(பெரியோகாக்டசு டைவாரிகேடசு) என்பது கேம்பேபாஜிடே குடும்பத்தில் உள்ள மின்சிட்டுகள் பேரினமான பெரியோகாக்டசினைச் சார்ந்த கிழக்கு ஆசியாவின் குருவி சிற்றினம் ஆகும். பெரும்பாலான மின்சிட்டுகளின் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டாலும், இந்த சிற்றினம் சாம்பல், வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆண் பறவை வெள்ளை முகத்துடன் கறுப்பு முதுகினைக் கொண்டுள்ளது. இருப்பினும் பெண் பறவை சுவின்கோ மின்சிட்டின் பெண் பறவையுடன் அடையாளம் காண்பதில் குழப்பமடையலாம். இவை பெரும்பாலும் மற்ற மினிசிட்டுகளுடன் சேர்ந்து விதானத்தில் தீவனம் தேடுகின்றன.

விரைவான உண்மைகள் உரோசா மின்சிட்டு, காப்பு நிலை ...
Remove ads

விளக்கம்

Thumb
ஆணின் முறைமை

சாம்பல் மின்சிட்டு சுமார் 18.5 முதல் 20 செ.மீ. நீளமுடையன. ஆண் பறவையின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும் கீழே வெண்மை நிறமாகவும் இருக்கும். இது ஒரு வெள்ளை நெற்றியுடன் கருப்பு உச்சியினைக் கொண்டுள்ளது. பறக்க உதவும் இறகுகள் முழுவதும் வெண்ணிறப் பட்டை காணப்படுகிறது. வெளிப்புற வால் இறகுகள் வெண்மையானவை. அலகும் பாதங்களும் கருப்பு நிறமுடையன. பெண்ணின் தலைப்பகுதியில் சாம்பல் நிறத்தில் உள்ளது. அலகிற்கும் கண்ணுக்கும் இடையில் கருப்பு பட்டை காணப்படுகிறது. இதற்கு மேல் ஒரு குறுகிய வெள்ளை பட்டை உள்ளது. இதனுடைய அழைப்பு ஒரு உயர் பிட்ச், உலோக ட்ரில் உள்ளது. இது உரோசா மின்சிட்டு மற்றும் சுவின்கோ மின்சிட்டுஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[2] ஒரு வருடத்தில் இரண்டு முறை சிறகுகளை உதிர்க்கும் பறவைகளில் இதுவும் ஒன்று. மேலும் மினிசிட்டுகளில் மிக நீண்ட தூரம் வலசைப்போகும் பறவையும் இதுவே ஆகும்.[3]

இது தென்கிழக்கு சைபீரியா, வடகிழக்கு சீனா, கொரியா மற்றும் சப்பானில் இனப்பெருக்கம் செய்கிறது. தெற்கு சப்பானின் இரியூக்கியூ தீவுகளில் உள்ள பறவைகள் பொதுவாக ஒரு தனி சிற்றினமாகக் கருதப்படுகின்றன. சாம்பல் மினிசிட்டு ஒரு நீண்ட தூரம் இடம்பெயரும் வலசைப்போகும் பறவையாகும். இவை குளிர்காலத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சுமாத்திரா, போர்னியோ மற்றும் பிலிப்பீன்சு வரை செல்கிறது. இது காடுகளிலும், பரந்து விரிந்த மரங்களைக் கொண்ட திறந்த பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பூச்சிகளை உணவாகத் தேடுகிறது. சில சமயங்களில் பிற பறவைகளுடன் உணவு தேட மந்தைகளாகச் சேரும்.[4][5] வலசைப்போகும் பறவைகள் பெரும்பாலும் பெரிய மந்தைகளாகக் காணப்படுகின்றன.

Remove ads

பாதுகாப்பு

சாம்பல் மின்சிட்டின் நிலை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகக் கருதப்படுகிறது. அமாமி தீவில் உள்ள சாம்பல் மின்சிட்டின் எண்ணிக்கை 1985 முதல் 2001 வரை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.[6]

தெற்காசியப் பிராந்தியத்தில், இவை அரிதாகவே கருதப்படுகின்றன. இவை முதன்முதலில் இந்திய நிலப்பரப்பில் 1965-ல் மட்டுமே காணப்பட்டன.[7] இருப்பினும் இவை அந்தமான் தீவுகளில் 1897-ல் இருப்பது அறிவிக்கப்பட்டன.[8] இதன்பின்னர் அதிக முறை பதிவாகியுள்ளது.[7][9][10][11][12]

Remove ads

இனப்பெருக்கம்

சாம்பல் மின்சிட்டு நான்கு முதல் ஏழு முட்டைகள் வரை இடும். இவை 17 முதல் 18 நாட்கள் வரை அடைகாக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads