வெண்வயிற்று மின்சிட்டு

குருவிச் சிற்றினம் From Wikipedia, the free encyclopedia

வெண்வயிற்று மின்சிட்டு
Remove ads

வெண்வயிற்று மின்சிட்டு (White-bellied minivet)(பெரிக்ரோகோடசு எரித்ரோபைகியசு) என்பது நேபாளம் மற்றும் இந்தியாவில் பெரும்பாலும் உலர்ந்த இலையுதிர் காடுகளில் காணப்படும் ஒரு வகை மின்சிட்டு ஆகும்.

Thumb
பரத்பூர், ராஜஸ்தான், இந்தியா .
விரைவான உண்மைகள் வெண்வயிற்று மின்சிட்டு, காப்பு நிலை ...
Remove ads

சொற்பிறப்பியல்

மின்சிட்டுகள் என்ற வடமொழிப் பெயரின் தோற்றம் குறித்துத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு இந்தியப் பெயரின் ஆங்கிலத் தழுவலாக இருக்கலாம். மின்சிட்டுகள் பேரினமானது சில மின்சிட்டுகளின் குங்குமப்பூ நிறத்துடன் தொடர்புடையதாகத் தெரிகிறது.

விளக்கம்

ஆண் வெண்வயிற்று மின்சிட்டுகள் பளபளப்பான கருப்பு தலை, கழுத்து, வால் மற்றும் மேற்பகுதியினைக் கொண்டுள்ளது. இந்த சிற்றினம் வெள்ளை கழுத்து, ஆரஞ்சு தொண்டை, பிற கீழ்ப் பகுதி வெண்மை நிறத்தில் காணப்படும். பின்பகுதி ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. இறக்கைகளில் வெள்ளை அடையாளங்கள் உள்ளன.

பெண் மின்சிட்டு, அடர் சாம்பல் மேல் பகுதியுடன், கருப்பு நிற இறக்கை, வெள்ளை கழுத்து, கருப்பு வால் மற்றும் அலகுக்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி பளபளப்பான கருப்பு நிறத் தோற்றத்தில் காணப்படும். இதன் இறக்கைகள் ஆண்களின் இறக்கைப் போன்று வெள்ளை அடையாளங்களைக் கொண்டுள்ளன. மேலும் பின்பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். [2]

இதன் நீளம் 18.5 முதல் 20 செ.மீ வரை இருக்கும்.

Remove ads

வாழ்விடமும் நடத்தையும்

வெண்வயிற்று மின்சிட்டுகள் நேபாளம் மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. முக்கியமாக இவை வறண்ட இலையுதிர் காடுகளில் காணப்படும். இந்த சிற்றினம் திறந்த புன்னிலங்களில் அரிதான அகாசியா தளிர்கள், உலர்ந்த புல்வெளிகள் மற்றும் விவசாய நிலம் போன்ற செயற்கை நிலப்பரப்புகளில் வாழ்கிறது. இது 20,000 கி.மீ. க்கும் அதிகமான மிகப் பெரிய பகுதியை ஆக்கிரமித்துள்ளது.[3][4]

மினிசிட்டுகள் பொதுவாகச் சிறிய குழுக்களாகக் காணப்படும். சில சமயங்களில் மற்ற சிற்றினங்களுடன் இணைந்து காணப்படும். இது பறந்தோ அல்லது மரங்களின் விதானத்தில் அமர்ந்தோ பூச்சிகளை இரையாகப் பிடிக்கின்றன.[5]

இதன் குரல் இனிமையான ஊதல் ஊதிப் போன்றது.[6]

இனப்பெருக்கம்

இந்த பறவை மரத்தின் உச்சியில் கூடு கட்டுகிறது. கூடு என்பது சிறிய மரக்கிளைகள் மற்றும் சிலந்தி வலைகளால் பிணைக்கப்பட்ட ஒரு கோப்பை வடிவ அமைப்பாகும். பொதுவாக நான்கு முட்டைகள் வரை இக்கூட்டில் இடும். இவை 17 முதல் 18 நாட்கள் வரை அடைகாக்கும். அடைகாத்தல் முக்கியமாகப் பெண் பறவைகளால் செய்யப்படுகிறது. ஆனால் இரண்டு பறவைகளும் சந்ததிகளை வளர்க்க உதவுகின்றன.

துணையினங்கள்

வெண்வயிற்று மினிசிட்டுகளில் இரண்டு துணையினங்கள் உள்ளன:[7]

பெ. எ. அல்பிப்ரான்சு: மத்திய மியான்மர் சமவெளியில் காணப்படும்

பெ. எ. எரித்ரோபிசியசு தீபகற்ப இந்தியா (பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் முதல் பீகார் மற்றும் மைசூர் வரை).

பாதுகாப்பு நிலை

இந்தச் சிற்றினமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என்று பட்டியலிடப்பட்டுள்ளது.[8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads