மிஸ். மார்வெல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிஸ். மார்வெல் (ஆங்கிலம்: Ms. Marvel) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான 'கமலா கான் / மிஸ். மார்வெல்' என்ற வரைகதையை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக பிஷா கே. அலி என்பவர் உருவாக்கியுள்ளார்.
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த தொடரை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கமலா கான் / மிஸ். மார்வெல் என்ற கதாபாத்திரத்தில் இமான் வேலனி என்பவர் நடிக்கின்றார். இவருடன் சாகர் ஷேக், அராமிஸ் நைட், மற்றும் மாட் லிண்ட்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆகஸ்ட் 2019 இல் அலியின் தலைமையில் இந்தத் தொடர் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டது.
2020 செப்டம்பர் மாதம் நடிகை இமான் வேலனி என்பவர் கமலா கான் / மிஸ். மார்வெல் என்ற கதாபாத்திரத்திற்காக ஒப்பத்தம் செய்யப்பட்டார். அடில் எல் ஆர்பி, பிலால் பல்லா, ஷர்மீன் ஒபைட் சினாய் மற்றும் மீரா மேனன் ஆகியோர் தொடரின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் படப்பிடிப்பு நவம்பர் 2020 க்குள் தொடங்கியது.[1]
இந்த தொடர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தொடராக 8 சூன் 2022 அன்று திரையிடப்பட்டது, மேலும் 13 ஜூலை அன்று ஆறு அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. இந்தத் தொடர் ஆக்கப்பூர்வமான காட்சி நடை மற்றும் வெள்ளணியின் நடிப்பிற்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த தொடரின் தொடர்சியாக 2023 ஆம் அன்று தி மார்வெல்ஸ் என்ற படம் வெளியானது. அதில் இமான் வேலனி மீண்டும் கமலாவாக நடிக்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- இமான் வேலனி - கமலா கான் / மிஸ். மார்வெல்
- செர்சி நகரத்தைச் சேர்ந்த 16 வயதான முஸ்லீம் பாகிஸ்தான்-அமெரிக்கர், இவர் மீநாயகன் ரசிகர் அதனால் மீநாயகன் பற்றிய புனைகதைகளை எழுதுகிறார். இவர் குறிப்பாக கேப்டன் மார்வெல் மற்றும் அவர் வடிவத்தை மாற்றும் சக்திகளைப் பெறுகிறார்.[2][3]
- அராமிஸ் நைட் - கரீம் / ரெட் டாகர்
- சாகர் ஷேக் - அமீர்கான்(கமலாவின் அண்ணன்)
- ரிஷ் ஷா - கம்ரான்
- மாட் லிண்ட்ஸ் - புருனோ கரேலி (கமலாவின் சிறந்த நண்பி)[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads