முகம்மது பஷீர்
இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைக்கம் முகமது பஷீர் (Vaikom Muhammad Basheer, 19 சனவரி 1908 - 5 சூலை 1994) மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப்பறம்பு என்ற ஊரில் பிறந்தார். இளம்வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார்.
வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்கள் வழியாகச் சென்றவர் பஷீர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூபி துறவி, சூதாட்டவிடுதி ஊழியர், திருடர் ஆகியபல தொழில்களைச் செய்திருக்கிறார். கடுமையான வறுமையைச் சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் இடதுசாரிகளுடன் ஒத்துழைத்தார். பின்னர் இஸ்லாமிய சூபி மரபை ஏற்றுக்கொண்டவர் ஆனார். ஒருங்கிணைந்த இந்தியாவை தன் தேசமாக ஏற்றுக்கொண்ட பஷீர் கடைசிவரை பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கவில்லை. காந்தியவாதியாக கடைசிவரை வாழ்ந்தார்.
Remove ads
விருதுகள்
- பத்மஸ்ரீ விருது (1982)
- கேரள சாகித்ய அக்காதமி விருது
- மத்திய சாகித்ய அக்காதமி விருது
- வள்ளத்தோள் விருது 1993
நூல்கள்
- பிரேமலேகனம் (1943)
- பால்யகாலசகி(1944)
- இன்றுப்பாப்பாக்கு ஒரானேண்டார்ந்நு (1951)
- ஆனவாரியும்பொன்குரிசும் (1953)
- பாத்துமாயுடே ஆடு (1959)
- மதிலுகள் (1965)
- சப்தங்ஙள் (1947)
- அனுராகத்தின்றே தினங்ஙள் (1983)
- ஸ்தலத்தே பிரதான திவ்யன் (1953)
- விஸ்வவிக்யாதமாய மூக்கு (1954)
- கதாபீஜம் (1945)
- ஜன்மதினம் (1945)
- ஓர்மக்குறிப்பு (1946)
- அனர்ஹநிமிஷம் (1946)
- விட்டிகளுடே சொர்க்கம் (1948)
- மரணத்தின்றே நிழல் (1951)
- முச்சீட்டுகளிக்காரண்டே மகள் (1951)
- பாவப்பெட்டவருடே வேஸ்ய (1952)
- ஜீவிதநிழல்பாடுகள் (1954)
- விசப்பு (1954)
- ஒருபகவத்கீதையும் குறே முலகளும் (1967)
- தாரா ஸ்பெஷல் (1968)
- மாந்த்ரிகப்பூச்ச (1968)
- நேரும் நுணயும்(1969)
- ஓர்மையுடே அறகள் (1973)
- ஆனப்பூட (1975)
- சிரிக்குந்ந மரப்பாவ (1975)
- சிங்கிடிமுங்கன் 1991)
- செவியோர்க்குக அந்திய காகளம் 1987
- யா இலாஹி (1997)
தமிழ் மொழிபெயர்ப்புகள்
- உலகப் புகழ்பெற்ற மூக்கு
- பாத்துமாவின் ஆடு
- பால்யகால சகி
- மதில்கள்
திரைக்கதை
- பார்கவி நிலையம்
வாழ்க்கை வரலாறு நூல்
பஷீர் தனிவழியிலோர் ஞானி, என்கிற அவரது வாழ்க்கை வரலாறு நூல் பேராசிரியர் எம்.கே.ஸாநுவால் எழுதப்பட்டது. இதை தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்க்க பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads