முதல் துருக்கியக் ககானரசு

From Wikipedia, the free encyclopedia

முதல் துருக்கியக் ககானரசு
Remove ads

முதல் துருக்கியக் ககானரசு[11] (First Turkic Khaganate) என்பது கோக் துருக்கியர்களின் ஒரு பிரிவான அசீனா இனத்தவர்களால் நிறுவப்பட்ட ஒரு துருக்கியக் கானரசு ஆகும். இது நடுக்கால உள் ஆசியாவில் பூமின் ககான் மற்றும் அவரது சகோதரர் இசுதமியின் தலைமைத்துவத்தின் கீழ் நிறுவப்பட்டது. மங்கோலியப் பீடபூமியில் ஆதிக்கம் வாய்ந்த சக்தியான உரூரன் ககானரசுக்குப் பிறகு முதல் துருக்கியக் ககானரசு வந்தது. இந்த அரசு நடு ஆசியாவில் தனது பகுதிகளை வேகமாக விரிவாக்கியது. கண்டங்களில் பரவி இருந்த முதல் நடு ஆசியப் பேரரசாக இது திகழ்ந்தது. மஞ்சூரியா முதல் கருங்கடல் வரை பரவியிருந்தது.[5]:49[12]

விரைவான உண்மைகள் முதல் துருக்கியக் ககானரசு, நிலை ...

கோக் துருக்கியர்கள் பழைய துருக்கிய மொழியைப் பேசிய போதிலும், ககானரசின் ஆரம்பகால அலுவல் ரீதியான நூல்கள் மற்றும் நாணயங்கள் சோக்திய மொழியைப் பயன்படுத்தின.[6][13] அரசியல் ரீதியாகத் துருக்கியர் என்ற பெயரைப் பயன்படுத்திய முதல் துருக்கிய அரசு இது தான்.[14] பழைய துருக்கிய எழுத்துமுறை 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது.[15][16]

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads