முந்திரி குடும்பம்
தாவரக் குடும்பம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொதுவாக முந்திரி குடும்பம்[1] அல்லது சுமாக் குடும்பம் என அழைக்கப்படும் அனகார்டியேசி, என்பது பூக்கும் தாவரங்களின் குடும்பமாகும், இதில் சுமார் 860 அறியப்பட்ட பேனங்களும், 83 இனங்களும் அடங்கும். [2] முந்திரி குடும்ப உறுப்பினர்கள் உள் ஓட்டச்சதைக்கனியான பழங்களை விளைகின்றன. இவற்றில் பொதுவாக ஓலியோ - ரெசின் உள்ள பால் உண்டு. சிலவற்றின் பால் உடம்பில் பட்டால் கொப்புளிக்கும். முந்திரி குடும்பத்தில் ஏராளமான பேரினங்கள் அடங்கும், அவற்றில் பல பொருளாதார ரீதியாக முக்கியமானவை, குறிப்பாக முந்திரி ( அனகார்டியம் வகை), மாம்பழம், சீன அரக்கு மரம், மஞ்சள் மொம்பின், பெருவியன் மிளகு , விஷப் படர்க்கொடி, விஷ ஓக், சுமாக், கோடினஸ், மருலா, குவாச்சலேட் ஆகியவற்றை உள்ளடக்கியது. பிஸ்தாசியா ( பசுங்கொட்டை மற்றும் மாஸ்டிக் மரத்தை உள்ளடக்கியது) இப்போது சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் முன்பு அது தனிக் குடும்பமாக பிஸ்டாசியாசியில் குறிப்பிடபட்டு வந்தது. [3]
Remove ads
விளக்கம்

இத்க் குடும்பத்தில் உள்ள மரங்கள் அல்லது புதர்கள், ஒவ்வொன்றிலும் தெளிவாகத் தோன்றாத சிறிய பூக்கள் உள்ளன. மேலும் இவற்றில் பிசின் அல்லது பால் உள்ளது. அது மிகவும் நஞ்சுத்தன்மையுடையதாக இருக்கலாம், கருப்பு நச்சு மரத்தில் இருப்பது போல சில நேரங்களில் கெட்டநாற்றம் வீசும். [4] இக்குடும்ப தாவரங்களின் தண்டுகள், வேர்கள், இலைகளில் காணப்படும் கலன் இழையம் அமைப்பின் உள் இழைமப்பட்டையில் அமைந்துள்ள பிசின் கால்வாய்கள் இந்த குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் சிறப்பியல்புகளாகும். [5]
இக்குடும்பத் தாவரங்கள் இலையுதிர் அல்லது மாறாப் பசுமை கொண்டவை. இலைகள் மாறியமைந்தவை (அரிதாக எதிர்). பெரும்பாலும் முழு இலைகள். சிலவற்றில் மூன்று பிரிவு இலையும், சிலவற்றில் ஒற்றைக் கூட்டு இலையும் உண்டு. இலையடிச் செதில்கள் கிடையாது. [4] [6]
இவற்றின் மலர்கள் கிளையின் அல்லது தண்டு இறுதியில் அல்லது இலை தண்டு சேரும் இடத்தில் கொத்து கொத்தாகக் கலப்பு மஞ்சரியாக வளரும். [4] பெரும்பாலும் இந்த குடும்பத்தில், ஒருபால், இருபால் பூக்கள் கலந்து ஒரே கொத்தில் இருக்கும். புல்லி 3-5; அல்லி 3-5 பிரிந்தவை, தழுவு இதழமைப்புள்ளவை. கேசரம் சாதாரணமாக அல்லியிதழ்களத்தனை. சூலகம் மற்ற உறுப்புக்களுக்கு மேலுள்ளது, அல்லது அதற்கு அடியிலிருக்கும் ஆதான மண்டலத்தில் (Disc) சிறிதளவோ நிரம்பவோ அழுந்தியிருக்கும். சூலிலை 3-1. சூற்பை 1 அல்லது 2-6 அறைகள் உள்ளது. அறைக்கு ஒரு சூல் இருக்கும். பெரும்பாலும் கனிக்கு ஒரு சூலே முதிரும். கனி உள்ளோட்டுத் தசைக்கனி அல்லது கொட்டை. கொட்டை சிலவற்றில் வெடிக்கும்.
கனிகள் முதிரும் போது அரிதாகவே வெடிக்கும். [4] மேலும் பெரும்பாலும் உள்ளோட்டுச் சதைக்கனி ஆகும்.
வித்துப் பூச்சுகள் மிகவும் மெல்லியவை. இந்தக் குடும்பத்தில் வித்தகவிழையம் சிறியதாகவோ, இல்லாமலோ கூட இருக்கும். வித்திலைகள் சதைப்பற்றுள்ளவை. முளையத்தைச் சுற்றி வெண்ணிழையம் இல்லாமல் விதைகள் தனித்து இருக்கும். [4]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads