மாம்பழம்

மாம்பழம் என்பது ஒரு பழமாகும் From Wikipedia, the free encyclopedia

மாம்பழம்
Remove ads

மாம்பழம் மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். மாம்பழங்கள் வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து தோன்றியதாக அறியப்படுகின்றது. உலகம் முழுவதும் பல மாம்பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. வகையை பொறுத்து மாம்பழத்தின் அளவு, வடிவம், இனிப்புத்தன்மை, தோல் நிறம் மற்றும் சதை நிறம் ஆகியவை மாறுபடும். மாம்பழங்கள் பொதுவாக வெளிர் மஞ்சள், தங்க நிறம் அல்லது பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கலாம்.

Thumb
மாம்பழம்

மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன. மாம்பழமானது இந்தியா, பாக்கித்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் தேசியப் பழமாக உள்ளது. மா மரம் வங்காளதேசத்தின் தேசிய மரமாகும்.[1][2][3]

Remove ads

சொற்பிறப்பியல்

தமிழ் மொழியில் "மா" ("மாம்பழ மரம்") மற்றும் "காய்" ("பழுக்காத பழம்") என்பதிலிருந்து மாங்காய் என்ற வார்த்தை உருவானது. ஆங்கில வார்த்தையான மாங்கோ ("மாம்பழம்") 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய வார்த்தையான மாங்கா என்பதிலிருந்து வந்தது. இந்த போர்த்துகீசிய வார்த்தை தமிழ் மொழியிலிருந்து மலாய் மொழி வழியாகப் பெறப்பட்டதாகும். [4][5]

மா மரம்

Thumb
பூத்துக் குலுங்கும் மாமரம்

மா மரங்கள் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இவற்றின் விட்டம் 15 மீட்டர் வரை இருக்கும். இந்த மரங்கள் நீண்ட காலம் காய்க்கக்கூடியவை. சில மாமரங்கள் 300 ஆண்டுகளுக்குப் பிறகும் காய்க்கின்றன.[6] மண்ணில் ஏறத்தாழ 20 அடி (6 மீட்டர்) ஆழத்திற்கு இதன் வேர்கள் பாய்கின்றன. அதிக அளவில் சிறிய வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவுகின்றன.[7] இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 – 35 செ.மீ நீளமும், 6 – 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன.[7]பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 – 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான நறுமணத்தையும் கொண்டுள்ளன.[7] 500க்கும் மேற்பட்ட மாமர வகைகள் உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை கோடை காலத்தில் பழங்களை ஈனுகின்றன.[8] பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.[7]

Remove ads

மாம்பழம்

Thumb
குறுக்கில் வெட்டப்பட்ட ஒரு மாம்பழம்

மாம்பழம் நீண்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். வகையை பொறுத்து மாம்பழத்தின் அளவு, வடிவம், இனிப்புத்தன்மை, தோல் நிறம் மற்றும் சதை நிறம் ஆகியவை மாறுபடும்.[7]

பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும்.[9] இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 – 7 செ.மீ நீளமும், 3 – 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.[7] இந்த விதையை சுற்றி சாற்றுள்ள பழப்பகுதி இருக்கும். அதை சுற்றியுள்ள தோல் மெழுகு போன்று வழுவழுப்பாக இருக்கும். மாம்பழ தோல் பொதுவாக வெளிர் மஞ்சள், தங்க நிறம் அல்லது பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கலாம்.[7] பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது.[7] மா மரங்கள் விதைகளிலிருந்து நேரடியாக வளரும்.[7]

வரலாறு

மாம்பழங்கள் வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து தோன்றியதாக அறியப்படுகின்றது.[10][11] பரிணாம வளச்சியின் போது, மாம்பழ விதைகள் பெரும்பாலும் அழிந்து போன பண்டைய காலத்து பெரிய மிருகங்கள் மற்றும் பறவைகளால் பரப்பட்டிருக்கக்கூடும்.[12] இவற்றின் தோற்றத்திலிருந்து, மாம்பழங்கள் மரபணு ரீதியாக துணை வெப்பமண்டல இந்திய வகை மற்றும் வெப்பமண்டல தென்கிழக்கு ஆசிய வகை என இரண்டு வேறுபட்ட வகைகளாகப் பிரிந்தன:[10][11]

ஆசியாவிலிருந்து, ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் அரபு மற்றும் பாரசீக வர்த்தகர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு மாம்பழங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[13] காலனித்துவ ஆண்டுகளின் போது உலகெங்கிலும் உள்ள மற்ற பகுதிகளில் இது மேலும் பரவியது. போர்த்துகீசியப் பேரரசு மாம்பழத்தை இந்தியாவிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பரப்பியது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து, 16 முதல் 17 ஆம் நூற்றாண்டில் இதை பிரேசிலுக்கு அறிமுகப்படுத்தினர். பிரேசிலில் இருந்து, இது 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை வடக்கு நோக்கி கரீபியன் மற்றும் கிழக்கு மெக்சிகோ வரை பரவியது. எசுப்பானியப் பேரரசு பிலிப்பைன்ஸிலிருந்து மேற்கு மெக்ஸிகோவிற்கு மாம்பழங்களை அறிமுகப்படுத்தியது.[11][14]

Remove ads

மாம்பழ விளைச்சல்

மேலதிகத் தகவல்கள் மாம்பழ விளைச்சல் – 2022, நாடு ...

பல நூற்றுக்கணக்கான மாம்பழ சாகுபடி வகைகள் உள்ளன. ஒரு காலநிலையில் காய்க்கும் மாம்பழ வகைகள் மற்ற பகுதிகளில் விளைச்சல் தராமல் போகலாம்.[16] பொதுவாக, பழுத்த மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். அதே சமயம் ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள் பெரும்பாலும் பச்சைத் தோல்களுடன் பழுக்காத நிலையில் பறிக்கப்படுகின்றன. சில சமயங்களில் பழுக்க வைக்கும் போது எத்திலீன் என்ற இரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது.

மாம்பழம் இப்போது பெரும்பாலான உறைபனி இல்லாத வெப்பமண்டல மற்றும் வெப்பமான மிதவெப்ப மண்டல காலநிலைகளில் பயிரிடப்படுகிறது. இது தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய இடங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது.[17] மாம்பழங்கள் எசுப்பானியா மற்றும் ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளில் சிறிய அளவில் பயிரிடப்படுகின்றன.[18]

விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
Remove ads

பயன்பாடு

மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது.[19] பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.

Thumb
உப்பு, மிளகாய் சேர்க்கப்பட்ட மாங்காய்த் துண்டுகள்

மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன.[20][21] மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. [22] இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. [23][24] பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கப்படும் கூழுடன் உண்ணப்படுகின்றன.[25][26] மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில், மாங்காயைக் காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

ஊட்டச்சத்துகள்

மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.

நச்சுத்தன்மை

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம்.[7][22][27] வசந்த காலத்தில் மா மரங்கள் பூக்கும் போது, ​​பூவின் மகரந்தம் காற்றில் பரவுவததால் சுவாசிப்பதில் சிரமம், கண்களில் அரிப்பு அல்லது முக வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads