மு. அ. சிதம்பரம் அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்தையா அண்ணாமலை சிதம்பரம் அரங்கம் அல்லது பொதுவாகச் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது 1916ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தொடர்ச்சியாகப் போட்டிகள் நடைபெற்றுவரும் மைதானங்களுள் மிகப்பழைய மைதானம் இதுவாகும்.[2] இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவர் மு. அ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 36,446 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934ஆம் ஆண்டு முதலாவது தேர்வுப் போட்டி நடைபெற்றது.
இங்குதான் இந்தியா தேர்வுப் போட்டிகளில் தனது முதல் வெற்றியை 1952ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.
1996இல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.
Remove ads
சாதனைகள்
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வீரேந்தர் சேவாக் தென்னாபிரிக்காவுக்கு எதிராகப் பெற்ற 319 ஆகும்.
- இம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் சாயிட் அன்வர் இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 194 ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 652/7d ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற 83 ஓட்ட்ங்கள் ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி நரேந்திர ஹிர்வானி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 16/136 ஆகும்.
- ராகுல் திராவிட் தேர்வுப் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை இங்கு பூர்த்திசெய்தார்.
- சச்சின் டெண்டுல்கர் தேர்வுப் போட்டியொன்றில் நான்காவது இன்னிங்ஸில் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இங்கு இடம்பெற்றது.
Remove ads
உலகக் கிண்ணம்
1987 உலகக் கிண்ணம்
1996 உலகக் கிண்ணம்
2011 உலகக் கிண்ணம்
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads