மூர்மன்சுக் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

மூர்மன்சுக் மாகாணம்
Remove ads

மூர்மன்சுக் மாகாணம் (Murmansk Oblast, உருசியம்: Му́рманская о́бласть, மூர்மன்ஸ்கயா ஓபிலஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது உருசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இதன் நிர்வாக மையம் மூர்மசுக் நகரம் ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 795.409 ஆகும்.[7]

விரைவான உண்மைகள் மூர்மன்சுக் மாகாணம்Murmansk Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

இந்த மாகாணம் புவியியல் ரீதியாக, முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. கோலா குடாநாடு கிட்டத்தட்ட முழுமையாக வடக்கே ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ளது.[11] நான்கு நாடுகளில் பரவியுள்ள சாப்மி பிராந்தியத்தின் பெரிய ஒரு பகுதியாகவும் உள்ளது.[12] ஒப்ளாஸ்து எல்லைகளாக தெற்கில் உருசியாவில் கரேலிய குடியரசு, மேற்கில் பின்லாந்து , வடமேற்கில் நார்வே, வடக்கில் பேரன்ஸ் கடல், தெற்கு மற்றும் கிழக்கில் வெள்ளைக் கடல்[11] உருசியாவின் ஆர்க்காங்கெல்சிக் ஓபலாசுத்துக்கு குறுக்காக வெள்ளைக் கடல் உள்ளது.[11]

இந்த ஒப்ளாஸ்து மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்டது. கிபினி மற்றும் லோவோசிரோ போன்ற பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் (3,900 அடி) உயரம் கொண்டதாக உள்ளன.[11] ஒப்ளாஸ்துவின் வடக்குப் பகுதி பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ளது. தெற்குப் பகுதி தைகா மண்டலம் ஆகும்.[11] மாகாணத்தில் 100,000 ஏரிகள் மற்றும் 18,000 ஆறுகள் உள்ளன.[11]

Remove ads

வரலாறு

இந்த வட்டாரத்தின் பழங்குடி மக்களான சமி மக்கள் இப்போது சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர். ரஷ்யர்கள் 12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெள்ளை கடற்கரையை ஆராயத் தொடங்கினர். இந்த ஆரம்ப குடியேற்றங்களுக்கு பின் பல நூற்றாண்டுகளாக இந்த பகுதி வளர்ச்சி அடையாமல் இருந்தது மர்மேந்ஸ்க் நகரம் 1916 இல் நிறுவப்பட்டது. இந்த ஒப்ளாஸ்து மே 28, 1938-இல் நிறுவப்பட்டது.

மக்கள் வகைப்பாடு

மக்கள் தொகை: 795,409 ( 2010 கணக்கெடுப்பு ); 892,534 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,146,757 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு). இந்த பகுதியில் உள்ள பழங்குடி சமி மக்கள் சிறுபான்மை இனத்தவராக உள்ளனர். 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , ஒப்ளாஸ்து மக்கள் தொகையில் 92.2% பேர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்கின்றனர்.[13] மக்கள்தொகை மிகுந்த நகரம் ஒப்லாஸ்து நிர்வாக மையமான மர்மேந்ஸ்க் ஆகும் இந்த நகரத்தில் 336.137 மக்கள் வாழ்கின்றனர்.[13]

பின்வருமாறு 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, ஒப்ளாஸ்து இனக் கலவை இருந்தது:[7]

  • உருசியர்கள் : 89%
  • உக்ரைனியர்கள் : 4.8%
  • பெலாரஷ்யர்கள் : 1.7%
  • தடார்கள் : 0.8%
  • அசீரியர்கள் : 0.5%
  • மோர்தேவியர் : 0.2%
  • கரிலியன்கள் : 0.2%
  • கோமி : 0.2%
  • சமி மக்கள் : 0.2%
  • மற்றவர்கள்: 2.4%
  • 73.484 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

2012 இன் முக்கிய புள்ளிவிவரம்

  • பிறப்பு விகிதம் 1000 11.7 (ரஷ்யா சராசரி 13.30 ஆகும்)
  • இறப்பு விகிதம் 1000 11.2 [23]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்: [24]

2009 - 1.43 | 2010 - 1.49 | 2011 - 1.49 | 2012 - 1.57 | 2013 - 1.62 | 2014 - 1.65 (இ)

2009 முக்கிய புள்ளிவிவரம்

2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற பகுதிகளில் மக்கள் தொகை வளர்ச்சி (ஆண்டு ஒன்றுக்கு -0.16%) ஆக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஊரகப்பகுதிகளில் (ஆண்டு ஒன்றுக்கு +0.35% ) என்ற வகிதத்தில் வளர்ந்து வருகிறது.[15]

சமயம்

2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி[16] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 41.7% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 3% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% கத்தோலிக்க திருச்சபை, 1% முஸ்லிம்கள் , மற்றும் 0.4% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 28% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர், 12.5% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[16]

Remove ads

பொருளாதாரம்

இந்த ஒப்லாஸ்து இயற்கை வளங்கள் மிக்கதாகும், 700 வகைகளுக்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.[17] பிராந்தியத்தில் முக்கிய தொழில் மூலப்பொருட்களை பிரித்தெடுத்தல் அதைச்சார்ந்த தொழில்கள் ஆகும்.[18] பிற பெரிய தொழில்கள் என்றால் உலோகத் தொழில் (36,6 %), மீன்பிடி மற்றும் உணவுத்துறை (13,7%),[19][20] மின்சார-உற்பத்தி (22,9%). ஆகும். ஐஸ்பிரி துறைமுகம் இருசியாவின் கடல் போக்குவரத்தில் ஒரு முதன்மை பங்கு வகிக்கிறது, மேலும் இந்த ஒப்ளாஸ்து மொத்த உருசிய கடல் போக்குவரத்து வணிகத்தில் 41% பங்கு வகிக்கிறது. உருசியாவின் மீன்பிடி தொழிலில் மொத்த மீன் உற்பத்தியில் இப்பிராந்தியம் 16% அளிக்கிறது,

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads