மெந்தகாப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெந்தகாப் என்பது (மலாய்: Mentakab; ஆங்கிலம்: Mentakab; சீனம்: 文德甲) மலேசியா, பகாங் மாநிலத்தில், தெமர்லோ மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரம் முன்பு பாசிர் ராவா என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெயர் மாற்றம் பெற்று மெந்தகாப் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் தெமர்லோ, லஞ்சாங், கம்போங் துவாலாங், மெங்காராக், மற்றும் கெர்டாவ் ஆகிய வட்டாரங்களுக்கு அருகில் உள்ளது. 1901-ஆம் ஆண்டு இந்த நகரை மாநிலத் தலைநகராக நியமிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் நிலப் பற்றாக் குறையினால், குவாந்தான் நகரை மாநிலத் தலைநகராக நியமித்தது.
Remove ads
போக்குவரத்து தொடர்பு
தொடருந்து
மெந்தகாப் நகரில் மெந்தகாப் தொடருந்து நிலையம் உள்ளது. வடமேற்கு பகுதியில் இருந்து தென்பகுதிகளுக்குச் செல்லும் தொடருந்து தொடர்பு பாதை இந்த நகரைக் கடந்துதான் செல்கிறது.[1]
சாலை
கோலாலம்பூர்-குவாந்தான் நெடுஞ்சாலை இந்த நகரைக் கட்ந்து செல்கிறது. அதனால் இந்தச் சாலை, போக்குவரத்துத் தொடர்புக்கு முக்கியப் பங்களிக்கிறது. இந்தச் சாலையின் வழி, இவ்வட்டார மக்கள் நாட்டின் முக்கிய நகர்களுக்கு செல்ல மிக எளிமையாக அமைகிறது.
Remove ads
வசதிகள்
வங்கிகள்
♣ ஆம் பைனாஸ் (AmFinance)
♣ சிஐம்பி (CIMB)
♣ மேய்பேங் (Public Bank)
♣ பப்பிளிக் பேங் (Maybank)
♣ அக்ரோ பேங் (Agro Bank Malaysia)
♣ எச்எஸ்பிசி (HSBC Bank)
♣ ஆர்எச்பிசி பேங் (RHB Bank)
♣ ஒங் லியோங் பேங் (Hong Leong Bank)
♣ ஈஓன் பேங் (EON Bank)
விடுதிகள்
♣ புக்கிட் பென்டேரா ரிசோட் (Bukit Bendera Resort)
♣ நியுடன் விலா விடுதி (Newton Villa Hotel)
♣ சர்விந்தன் விடுதி (Sherwinton Hotel)
♣ சுப்ரிம் விடுதி (Supreme Hotel)
தொலைத் தொடர்பு
♣ மெக்சிஸ் (Maxis (M) Bhd)
♣ செல்கோம் (Celcom (M) Bhd)
♣ டிஜி (DiGi (M) Bhd)
குடியிருப்பு பகுதிகள்
♣ தாமான் புக்கிட் பென்டேரா
♣ தாமான் சாகா
♣ தாமான் ரிம்பா
♣ தாமான் தூனாஸ்
♣ தாமான் சாகா இன்டா
♣ தாமான் புக்கிட் செர்மின்
♣ தாமான் மெந்தகாப்
♣ தாமான் கேஎஸ்எம்
♣ பத்து காபொர்
Remove ads
கல்வி
ஆரம்ப கல்வி
மெந்தகாப் நகரில் மொத்தம் பத்து ஆரம்ப பள்ளிகள் உள்ளது. அவை கீழ் வருமாறு:
♦ தேசிய வகை மெந்தகாப் தமிழ்ப்பள்ளி
♦ தேசிய வகை மெந்தகாப் 1 சீனப்பள்ளி
♦ தேசிய வகை மெந்தகாப் 2 சீனப்பள்ளி
♦ அபுபாகர் தேசிய பள்ளி
♦ தேசிய வகை மெந்தகாப் தோட்ட தமிழ்ப்பள்ளி
♦ மெந்தகாப் நகர தேசிய பள்ளி
♦ பத்து காப்போர் தேசிய பள்ளி
♦ சாதின் தேசிய பள்ளி
♦ தேசிய வகை இயொங் செங் லுவன் தோட்ட தமிழ்ப்பள்ளி
♦ தேசிய வகை இயொங் செங் லுவன் சீனப்பள்ளி
இடைநிலை கல்வி
இந்நகரில் மூன்று இடைநிலைப்பள்ளிகள் உள்ளன. அவை ஹுவா லியன் இடைநிலைப்பள்ளி, மெந்தகாப் இடைநிலைப்பள்ளி, மற்றும் ஸ்ரீ செமந்தான் இடைநிலைப்பள்ளி ஆகும். இதில் ஹுவா லியன் இடைநிலைப்பள்ளி, கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளிள் பகாங் மாநிலத்திலேயே சிறந்து விளங்கி வருகிறது. இவ்வட்டாரத்தில் மெந்தகாப் இடைநிலைப்பள்ளி மட்டுமே படிவம் 6 வகுப்பினைக் கொண்டுள்ளது. இப்பள்ளி படிநிலை ஆறுக்குப் பிரசித்துப்பெற்றது.
உயர்க் கல்வி
மெந்தகாப் நகரில் ஒரு பல்கழைக்கழகமும் உண்டு. 'திறந்த பல்கலைக்கழகம்' (ஓபன் யுனிவர்சிட்டி) என்றழைக்கப்படும் இப்பல்கலைக்கழகம், அணைத்து வயதினரும் தங்களின் உயர் கல்வியைத் தொடர வழிவகுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை பல்வேறு துறைகளிள் இங்கு பெற முடிகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads