மேலூர் ஊராட்சி ஒன்றியம்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேலூர் ஊராட்சி ஒன்றியம் (Melur Panchayat Union) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4]

விரைவான உண்மைகள்

இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[5]மேலூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலூரில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,28,717 ஆகும். அதில் ஆண்கள் 64,787, பெண்கள் 63,930 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 24,477 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,431, பெண்கள் 12,046 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 207 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 95, பெண்கள் 112 ஆக உள்ளனர்.

ஊராட்சி மன்றங்கள்

மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. அழகர்கோவில்
  2. அம்பலகாரன்பட்டி
  3. அரசப்பன்பட்டி
  4. அரிட்டாபட்டி
  5. ஆட்டுக்குளம்
  6. ஆமூர்
  7. இ. மலம்பட்டி
  8. உறங்கான்பட்டி
  9. ஏ. வலையப்பட்டி
  10. கல்லம்பட்டி
  11. கிடாரிபட்டி
  12. கீரனூர்
  13. கீழவளவு
  14. கீழையூர்
  15. குறிச்சிபட்டி
  16. கொங்கம்பட்டி
  17. கொட்டகுடி
  18. கோட்டநத்தம்பட்டி
  19. சருகுவலையப்பட்டி
  20. சாத்தமங்கலம்
  21. சூரக்குண்டு
  22. செம்மினிபட்டி
  23. டி. வெள்ளாளபட்டி
  24. தனியாமங்கலம்
  25. திருவாதவூர்
  26. தெற்குதெரு
  27. நரசிங்கம்பட்டி
  28. நாவினிபட்டி
  29. பதினெட்டாங்குடி
  30. பனங்காடி
  31. புதுசுக்காம்பட்டி
  32. புலிப்பட்டி
  33. பூஞ்சுத்தி
  34. வண்ணாம்பாறைபட்டி
  35. வெள்ளரிபட்டி
  36. வெள்ளலூர்
  37. வேப்படப்பு
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads