மேல் தீர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேல் தீர் மாவட்டம் (Upper Dir District) (பஷ்தூ: بر دير ولسوالۍ, Urdu: ضلع دیر بالا), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தீர் நகரம் ஆகும். தீர் நகரம், கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடக்கே 269 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 1970-ஆம் ஆண்டில் தீர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு மேல் தீர் மாவட்டம் மற்றும் கீழ் தீர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
Remove ads
அமைவிடம்
பாகிஸ்தானின் வடக்கில் உள்ள மேல் தீர் மாவட்டத்தின் வடக்கிலும், வடமேற்கிலும் முறையே சித்ரால் மாவட்டம் மற்றும் ஆப்கானித்தான் உள்ளது. கிழக்கில் சுவாத் மாவட்டம், தெற்கில் கீழ் தீர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 9,47,401 ஆகும். அதில் ஆண்கள் 4,66,594 மற்றும் பெண்கள் 4,80,766 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 46.09% ஆகும். 95.35% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 471 பேர் மட்டுமே உள்ளனர் [1]90.78% மக்கள் பஷ்தூ மொழியும், கோகிஸ்தானி மொழி போன்ற பிற மொழிகள் பேசுவோர் 8.60% ஆக உள்ளனர்.[1]
மாவட்ட நிர்வாகம்
மேல் தீர் மாவட்டம் 3 தாலுகாகக்ளை கொண்டது. அவைகள்: [3]
- தீர் நகர தாலுகா
- செரிங்கல் தாலுகா
- வாரி தாலுகா
மக்கள் பிரதிநிதிகள்
இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதியும், கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads