மைத்ரேயி இராமகிருஷ்ணன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைத்ரேயி இராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan, பிறப்பு: திசம்பர் 28, 2001) தமிழ்ப் பின்னணி கொண்ட கனடிய நடிகை ஆவார். இவர் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் தேவி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
மைத்ரேயி ஒண்டாரியோ மாநிலத்தில் மிசிசாகா நகரில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட பெற்றோருக்குப் பிறந்தார். இவரது பெற்றோர் இலங்கையில் ஈழப் போரினால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக கனடாவில் குடியேறியவர்கள் ஆவர். இதனால் மைத்ரேயி தான் ஒரு தமிழர் மற்றும் கனடியர் என்றே தன்னை அடையாளப்படுத்த விரும்புவதாகவும் இலங்கையர் என்று அடையாளப்படுத்த விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.[1][2][3] இவர் மெடோவேல் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். இவர் பாடசாலை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.[4]
Remove ads
பணி
இவர் 2020 நெற்ஃபிளிக்சு தொடரான நெவர் ஹேவ் ஐ எவர் என்ற தொடரில் தேவி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[4][5] இத்தொடரில் நடிப்பதற்கு விண்ணப்பித்த 15,000 வேட்பாளர்களில் மிண்டி காலிங்கால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] இத்தொடரில் மைத்ரேயியின் நடிப்பு கனடாவில்[8][9][10] குறிப்பாக அவரது தமிழ் கனடிய அடையாளத்தின் காரணமாகவும்,[11][12][13] குறிப்பிடத்தக்க ஊடக கவனத்தைப் பெற்றது.[14]
2019 ஆம் ஆண்டில், டுடே என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தடைகளை உடைத்து உலகை மாற்றியமைக்கும் 18 சிறுமிகளின் பட்டியலில் இவரையும் பெயரிட்டது.[15][16] இவரது நடிப்பு இந்நிகழ்ச்சியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[17]வெரைட்டி என்ற இதழ் இவரது நடிப்பை ஒரு "அசாதாரண செயல்திறன்" எனப் புகழ்ந்தது.[18][19]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
