யவனர்கள், மகாபாரதம்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia

யவனர்கள், மகாபாரதம்
Remove ads

யவனர்கள், மகாபாரதம் (Yavana, Yona), மகாபாரத காவியத்தின் படி, பண்டைய பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு பகுதி நாடுகளான, பாரசீகம், காம்போஜம், பாக்திரியா, சிந்து நாடு, மத்திர நாடு, கேகய நாடு, ஆகிய நாடுகளில் தங்கியிருந்த கிரேக்கப் போர்ப் படையினரின் வழித்தோன்றல்களே யவனர்கள் ஆவார். யவனர்கள், சகர்கள், பகலவர்கள் காலப் போக்கில் பரத நாட்டின் மக்களுடன் திருமண உறவுகளின் மூலம் ஒன்றாக கலந்துவிட்டனர்.

Thumb
மகாபாரத இதிகாச கால நாடுகள்

பண்டைய இந்திய வரலாற்றில் யவனர் என்ற சொல், கிரேக்கர்களை மட்டும் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. கி பி 7-ஆம் நூற்றாண்டு முதல் அரேபியர்களையும், பாரசீகர்களையும் குறிப்பதற்கும் யவனர்கள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

Remove ads

பரத கண்டத்தில் யவனர்களின் வாழ்விடங்கள்

மகாபாரத காலத்தில் காந்தார நாட்டிற்கு அப்பால் உள்ள மக்களை யவனர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. காந்தாரத்திலிருந்து தொலைதொலைவில், மேற்கு பகுதியில் உள்ள நாட்டை பரம யோனா (Parama Yona) என்று மகாபாரதம் கூறுகிறது. ஐயோனா (Ionia) என்ற கிரேக்கப் பகுதியின் பெயரே சமஸ்கிருத மொழியில் யவனா (Yavana) என மருவிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

யவனர்கள், சிதியர்கள், சகர்கள், காம்போஜர்கள், பகலவர்கள், ஹூணர்கள் போன்ற இன மக்களை மகாபாரதம் மிலேச்சர்கள் (அயல் நாட்டவர்கள்) என்றும் குறிப்பிடுப்படுகிறது.

மகாபாரதத்தில் காம்போஜர்கள், மத்திரர்கள், கேகயர்கள், சிந்தியர்களை, யவனர்களுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. பொதுவாக வேத கால பண்பாட்டுடன் ஒத்துப் போகாத இன மக்களை, குருபாஞ்சால நாட்டினர், மிலேச்சர்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.

Remove ads

சங்க கால இலக்கியங்களில் யவனர்கள்

சங்க கால இலக்கியங்களின் மூலம், தமிழ்நாட்டு கப்பல் துறைமுகங்களில் யவனர்களின் குடியிருப்புகள் இருந்துள்ளது எனத் தெரியவருகிறது. (1)

கி மு முதலாம் - இரண்டாம் நூற்றாண்டு முதல் கி பி மூன்றாம் - நான்காம் நூற்றாண்டு முடிய தமிழ்நாட்டுடன் வணிகம் செய்த உரோமானிய வணிகர்களை தமிழகத்தில் யவனர்கள் என்று அழைத்தனர். [1]

வேத கால பண்பாட்டுடன் இணைத்துக் கொள்தல்

வேத கால மக்கள் யவனர்களின் அளப்பரிய வீரத்தையும், திறமையையும் ஒப்புக் கொண்ட வேத கால சமுதாயம், இருப்பினும் யவனர்களை அயல் நாட்டவர் (மிலேச்சர்கள்) என ஒதுக்கியே வைத்திருந்தது.

புராண கால கதையின் படி, மன்னர் யயாதியின் சாபம் காரணமாக, அவரது மகன்களில் ஒருவரான துர்வசு என்பரின் வழித்தோன்றல்களே யவனர்கள் எனும் மிலேச்சர்கள் ஆவார். (மகாபாரதம், (ஆதி பருவம்) 85: 34) யயாதியின் கடைசி மகனான புருவுக்கு யயாதிக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்யும் தகுதி கிடைத்தது. கலியுகத்தின் துவக்கத்தில் யவனர்கள் பாரத நாட்டின் மீது படையெடுப்பர் என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. (Srimad Bhagavatam 2.4.18 ) கிரேக்க நாட்டு பேரரசர் அலெக்சாண்டர் கி மு 326-இல் இந்தியா மீது படையெடுத்தார்.

மகாபாரதக் குறிப்புகள்

எதிர்காலத்தில் பரத கண்டத்தை, ஆந்திரர்கள், சகர்கள், புலிந்தர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாக்லீகர்கள், வாலகீயர்கள் மற்றும் ஆபீரர்கள், ஆட்சி செய்வார்கள் என மகாபாரதம் கணித்துள்ளது (மகாபாரதம் 3: 187).

பாண்டுவால் வெல்ல இயலாத யவனர்களை, அருச்சுனன் வென்று, குரு நாட்டின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். (மகாபாரதம் 1: 141).

மேற்கு கடற்கரைகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த மிலேச்சர்களான யவனர்கள், சகர்கள், பகலவர்கள் மற்றும் கிராதர்களின் கொட்டத்தை நகுலன் அடக்கி திறை வாங்கினான். (மகாபாரதம் 2: 31).

மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த, போர்க் குணம் கொண்ட யவனர்கள் மற்றும் காம்போஜர்களை போரில், நகுலன் மேற்கு கடற்கரைக்கு விரட்டியடித்தான் (மகாபாரதம் 12: 100).

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில் ஒரு அக்குரோணி படையுடன் யவனர்கள், சகர்கள், காம்போஜ நாட்டு மன்னர் சுதச்சினன் தலைமையில் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். (மகாபாரதம் 5: 19).

யவனர்கள், சகர்கள் மற்றும் காம்போஜ நாட்டு வீரர்களை சாத்தியகி தாக்கி அழித்தான்.[2]

பிற குறிப்புகள்

Remove ads

இதனையும் காண்க

உசாத்துணை

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads