ரந்தாவ் பாஞ்சாங்
மலேசியா - தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரந்தாவ் பாஞ்சாங், (மலாய்: Rantau Panjang; ஆங்கிலம்: Rantau Panjang; தாய்: รันเตาปันจัง; ஜாவி: رنتاو ڤنجڠ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், பாசிர் மாஸ் மாவட்டத்தில் (Pasir Mas District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரந்தாவ் பஞ்சாங் நகரின் வடக்குப் பகுதியில் கோலோக் ஆறு ஓடுகிறது. இந்தக் கோலோக் ஆறுதான் தாய்லாந்து; மலேசியா நாடுகளின் எல்லையாகவும் அமைகின்றது.[1]
Remove ads
பொது
இந்த நகரம் பல்வேறு வகையான விற்பனை பொருட்கள் மற்றும் நினைவு பரிசுப் பொருள்களுக்குப் பிரபலமானது. மலேசியாவின் தாய்லாந்து எல்லைத் தொடர்பான அரசாங்க அலுவலகங்கள் பெரும்பாலும் இங்குதான் உள்ளன.
எல்லைச் சோதனைகள் பிரிவு; பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு; அரச சுங்கப் பிரிவு; அரசு கலால் துறை; குடிவரவுத் துறை; அரச மலேசியக் காவல்துறை போன்றவை உள்ளன. [2]
ரந்தாவ் பாஞ்சாங்கைச் சுற்றிலும் போதைப்பொருள் கடத்தல்; அரிசி கடத்தல்; சர்க்கரை கடத்தல்; மனிதர்கள் கடத்தல் போன்ற கடத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. ரந்தாவ் பாஞ்சாங் சுங்க வரி இல்லாத ஒரு பகுதி. அதனால் பொதுமக்கள் அதிகமாக இங்கு வருகின்றனர்.[2]
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
ரந்தாவ் பாஞ்சாங் நிர்வாக மன்றத்தில் 7 முக்கிம்கள் உள்ளன.
- பக்காட் (Bakat)
- குவால் நெரிங் (Gual Nering)
- லுபோக் கோங் (Lubok Gong)
- லுபோக் செட்டோல் (Lubok Setol)
- ரகுமாட் (Rahmat)
- ரந்தாவ் பாஞ்சாங் (Rantau Panjang)
- தெலாகா மாஸ் (Telaga Mas)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads