ரந்தாவ் பாஞ்சாங்-சுங்கை கோலோக் பாலம்

மலேசியா - தாய்லாந்து எல்லையில் பாலம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் பாலம் அல்லது மலேசியா–தாய்லாந்து முதலாவது பாலம் (ஆங்கிலம்: Rantau Panjang–Sungai Golok Bridge அல்லது First Malaysia–Thailand Bridge; மலாய் மொழி: Jambatan Rantau Panjang–Sungai Golok; தாய்லாந்து மொழி: สะพานโก–ลก) என்பது மலேசியா - தாய்லாந்து எல்லையில் கொலோக் ஆற்றின் மீது அமைந்துள்ள ஒரு சாலைப் பாலமாகும்.

விரைவான உண்மைகள் ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் பாலம், அதிகாரப் பூர்வ பெயர் ...

இந்தப் பாலத்தை அமைதிப் பாலம், (ஆங்கிலம்: Harmony Bridge; மலாய் மொழி: Jambatan Muhibah) என்றும் அழைக்கிறார்கள்.

இந்தப் பாலம் மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தையும்; தாய்லாந்து, நாராதிவாட் (Narathiwat) மாநிலத்தின் கோலோக் ஆறு (Sungai Kolok) நகரத்தையும் இணைக்கின்றது.[1][2]

மலேசியா; தாய்லாந்து இரு நாட்டு அரசாங்கங்களின் கூட்டு முயற்சியால் இந்தப் பாலம் கட்டப்பட்டது. 1973 மே 21-ஆம் தேதி, மலேசிய பிரதமர் துன் அப்துல் ரசாக் மற்றும் தாய்லாந்து பிரதமர் பீல்ட் மார்ஷல் தானோம் கிட்டிகாச்சோர்ன் (Thanom Kittikachorn) ஆகியோரால் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

Remove ads

வடிவமைப்பு

இந்தப் பாலம் பேழைத் தூலங்களால் (beam bridge with box girder) அமைக்கப்பட்ட பாலமாகும். பிரதான பகுதியானது அழுத்தப்பட்ட கற்காரையைப் (prestressed concrete) பயன்படுத்தி கட்டப்பட்டு உள்ளது. மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஒவ்வொரு பகுதியும் 30.48 மீட்டர் (100 அடி) நீளம் கொண்டது. ஒட்டுமொத்தமாக 109.73 மீ (360 அடி) நீளம். இந்தப் பாலத்தின் அகலம் 7.32 மீ (24 அடி). பாலத்தின் ஒவ்வொரு பக்கமும் 2.13 மீ (7 அடி) அகலத்திற்கு நடைபாதைகள் உள்ளன.

Remove ads

கட்டுமானம்

ஒரு மலேசிய ஒப்பந்ததாரரான சாங் லூன் கட்டுமான நிறுவனத்தின் மூலமாகக் கட்டுமானங்கள் நடைபெற்றன. 1970 செப்டம்பர் 23-ஆம் தேதி பாலம் கட்டுவதற்கு ஏலம் விடப்பட்டது. அந்தப் பொது ஏலத்தில், பாலம் கட்டும் குத்தகை சாங் லூன் கட்டுமான நிறுவனத்திற்குக் கிடைத்தது.

கேட்கப்பட்ட தொகை மலேசிய ரிங்கிட் $630,000 அல்லது தாய்லாந்து 4,500,000 பாட். 1970 டிசம்பர் 16-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு அரசாங்கங்களும் தலா பாதித் தொகையைச் செலுத்தின.

1972 சூன் 15-ஆம் தேதி, காலக்கெடுவிற்குப் பிறகு, 1973 மார்ச் 20-ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. அதனால், சாங் லூன் நிறுவனம் ஒரு நாளைக்கு ரிங்கிட் M$200 அல்லது தாய்லாந்து 1,400 பாட் கூடுதல் நேர அபராதம் செலுத்த வேண்டி இருந்தது. மொத்தம் ரிங்கிட் M$36,000 அல்லது தாய்லாந்து252,000 பாட் அபராதம் கட்டப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads